பக்கம்:கலைஞன் தியாகம்.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

90 கலைஞன் தியாகம்

என்று கேட்டான். பங்களாவின் பின்புறத்தில் இருந்த அந்த மரம் அவன் கண்ணில் தென்படு வதில்லை. 'தெரியும், தெரியும்; இப்படியே வங்து பழங்களைத் திருடிக்கொண்டு போகலாமென்ற எண் ணமோ?' என்று வெருட்டினன் அந்தப் பாவி. அவன் பேச்சில்ை அது பழுத்திருக்கிறதென்பதைக் கிழவன் அறிந்தான்்; ஏன் இவனே ஒரே குத்தாகக் குத்தி விட்டு ஒடிப்போய் அங்த மரத்தைப் பார்த்துவிட்டு வரக்கூடாது?’ என்றுகூட அவன் மனம் எண்ணியது. அடுத்த கூடிணமே அந்த உணர்ச்சி தளர்ந்தது; 'தலே விதி நான் செய்த பாவம்! நான் வளர்த்த மரத்தைக் கண்ணுற்கூடப் பார்க்கக் கொடுத்து வைக்கவில்லை! என்று வருத்தத்துடன் திரும்பிச் செல்வான்.

அருணுேதயம் ஆகியிருக்கிறது; இருட்டு நன்ரு கத் தெளியவில்லை. குப்புசாமி அவ்விரவு முழுதும் உள்ளத்தோடு பெரிய போராட்டமொன்றை நடத் திக்கொண்டிருந்தான்். அவன் ஹிருதயம் படீரென்று வெடித்து விடும்போல் இருந்தது. ஒரு முறையாவது அந்த ஒட்டுமாமரத்தைப் பாராவிட்டால் அவன் இனி நல்ல அறிவோடு இருக்க முடியாது. கடைசியில் எப்படியாவது பங்களாவிற்குள் திருட்டுத்தனமாக நுழைந்து அதைப் பார்த்து வருவதென்று துணிந்து விட்டான். . . . .

எப்படியோ ஏறிக் குதித்து ஒருவருக்கும் தெரி யாமல் மரத்தடிக்கு வந்தான்். ஒரே ஓட்டங்தான்்; அந்த மரத்தைக் கட்டிக்கொண்டு ஓவென்று அலறி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கலைஞன்_தியாகம்.pdf/98&oldid=686260" இலிருந்து மீள்விக்கப்பட்டது