பக்கம்:கலைஞன் தியாகம்.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தோட்டக்காரன் 91 விட்டான். அந்தச் சத்தம் அங்கே படுத்திருந்த தோட்டக்காரன் காதிற் பட்டது. வங்து பார்த்தான்். ஒட்டுமாமரத்தின் உயிரும் குப்புசாமியின் உயிரும் பிணைக்கப்பட்டிருப்பதை அவன் எப்படி உணர் வான்? போக்கிரிக் கிழவா! கையுங்களவுமாக அகப் பட்டுக்கொண்டாயா?” என்று தலையில் இரண்டடி போட்டுவிட்டு உறுமினன், அந்தத் தோட்டக்காரன். குப்புசாமியோ அவ்வளவு அடியையும் பட்டுக் கொண்டு கட்டிய கையை நெகிழ்க்கவே இல்லே. இறுகக் கட்டிய கையின்மேல் அடித்தான்், அந்தப் பாதகன். அப்பொழுதும் கிழவன் விடவில்லை. ஆத்திர மெல்லாம் சேர்த்து அடித்தபோது, "ஐயோ’ என்று கதறிக்கொண்டு கீழே விழுந்தான்் கிழவன். அவனுக்கு மயக்கம் போட்டுவிட்டது. அதற்குள் பங்களா விலிருந்து எஜமான் வங்துவிட்டார்.

"என்னடா சங்கதி?' என்று கேட்டுக்கொண்டே வந்தார் புண்ணியகோடி செட்டியார். -

'இந்தத் திருட்டுப்பயல் பங்களாவுக்குள் புகுந்து பழங்களேத் திருட வங்திருக்கிருன். நான் பார்த்து விட்டேன்; அடித்தேன். கீழே விழுங்து பாசாங்கு செய்கிருன்' என்ருன் தோட்டக்காரன்.

மங்கலான வெளிச்சத்தில் செட்டியார் குனிந்து கிழவனேப் பார்த்தார். அவன் உண்மையிலேயே மயக்கமடைந்திருப்பதை அறிந்து தண்ணிர் கொண்டு. வந்து தெளிக்கச் செய்தார்.

கிழவன் கண்ணேத் திறந்து பார்த்தான்். மாமரத் தைக் கண்ட சந்தோஷ மிகுதியும் கலேயில் அடிக்கப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கலைஞன்_தியாகம்.pdf/99&oldid=686261" இலிருந்து மீள்விக்கப்பட்டது