உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கலைஞரும் கவிதையும் 1981.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4 களை வளர்க்க வல்லவன் கவிஞன்! எனவே அந்த வகையில் கலைஞர் அவர்கள் இந்த ஆற்றலைப் பெருக்கிக் கொண்ட காரணத்தாலே தன்னை ஒரு கவிஞனாக ஆக்கிக்கொண்டார். ஆனால் அவருக்கு கவிஞனாவது என்பது ஒரு குறிக் கோளாக அமையவில்லை. அவருடைய பல்வேறு பணிகளுக் கிடையில் அவருடைய மன நிறைவிற்காக உணர்வுகளை வெளியிடு வதிலே அவருக்குத் தோன்றுகிற மகிழ்விற்காக, அரசியலிலே ஏற்படுகிற சோர்வை மாற்றுவதற்காக, மக்களுக்கு ஆற்றுகிற பணியிலே இதுவும் ஒருவகை என்ற காரணத்திற்காக கவிதைப்பணியிலே அவர் ஈடுபட்டவர் என்ற நிலையில் கலைஞர் அவர்களுக்கு அது ஒரு ஓய்வு நேரப் பணியாகவும் இருந்திருக்கிறது. இதுவும் ஒரு பணியாக அமைந்துவிட்டது. சிலநேரத்தில் ஓய்வைத் தேடிக் கொள்வதற்குப் பயன்படுகிற ஒரு பணியாகவும் இருக்கிறது. இன்னும் சிலரை ஓயவைப்ப தற்கான பணியாகவும் அது பயன்பட்டிருக்கிறது. ஓயாமல் அழுகிறவர்களைத் தேற்றுவதற்கான பணியாகவும் அதுபயன் பட்டிருக்கிறது. ஆனால் அடிப்படையிலே பார்க்கப்போனால் கலைஞரை வெளிப்படுத்துகிற, அவரது உள்ளத்தை வெளிப் படுத்துகிற ஒரு பணியாக அவருடைய கவிதைப் அமைந்திருக்கின்றது. R பணி கவிஞனின் முழு வடிவத்தை வெளிக்காட்டுவதே கவிதை. உண்மையான கவிஞன் யார் என்று ஆழ்ந்து எண்ணிப் பார்க்கிறபோது தன்னைத்தானே வெளிப்படுத்திக் கொள்கிற ஆற்றல் பெற்றவன் கவிஞன். தான் உணர்ந்ததை உணர்ந்த வாறு வெளிப்படுத்துகிறவன் என்று நான் முன்னாலே சொன்னேன். தன்னுடைய உள்ளத்தின் முழுத் தோற்றத்தை "The poem is the outer form of the personality of the poet என்று தெரிவிப்பார்கள். தன்னுடைய முழு