உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கலைஞரும் கவிதையும் 1981.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5 உணர்வை தன்னுடைய முழு இலட்சியத்தை மக்களைப் பற்றியோ நாட்டைப்பற்றியோ ஒருவன் எண்ணுகிற அந்த முழு எண்ணத்தை வெளியிடுவதிலே தான் கவிஞன் பிறக் கின்றான். அந்தவகையிலே முழுமையான தான் எண்ணு கிற அந்த முழு எண்ணத்தை - தன்னுடைய உள்ளுணர்வை- தன்னுடைய பேரார்வத்தை - தன்னுடைய வேட்கையை- குறிக்கோளை - கொள்கையை இவற்றையெல்லாம் வெளி யிடுகின்ற ஒரு வாய்ப்பாகத் தன்னுடைய ஆர்வத்தின் முழு வடிவத்தை உலகத்துக்குக் காட்டுகின்ற ஒரு வாய்ப்பாகக் கருதித்தான் கலைஞர் அவர்கள் இந்தக் கவிதைகளை வடித்திருக்கிறார். இன்னும் ஒருவகையிலே பார்த்தால் உரைநடை எழுது கிறபோது அந்த உரைநடையில் எவ்வளவு அழகான கருத்துக்களை தெளிவான சிந்தனைகளை - வாதிடுவதற் கான கருத்துக்களை ஒரு ஆற்றல்மிக்க எழுத்தாளன் எழுதி னாலுங்கூட அவன் மனதிலே ஏற்படும் மகிழ்ச்சி அந்த அளவுக்குப் பிறப்பதில்லை, பேசுகிறபோது ஓரளவு மகிழ்ச்சி பிறக்கிறது. எழுதுகிறபோது ஓரளவு மகிழ்ச்சி பிறக்கிறது. ஆனால் எழுதுகிறபோது, பேசுகிறபோது தோன்றுகிற அந்த இன்பம் கவிதை எழுதுகிறபோது கவிதையாக ஊறும் போது, கவிதையை வடிக்கிறபோது அந்த இன்பம், பெரிதா கிறது; நிறைவடைகிறது. அந்த இன்பம் அவனை மகிழ வைக்கிறது. எழுதுகிற எண்ணத்துக்கு வெற்றிகிடைக் கிறதோ இல்லையோ அதை எண்ணிப் பார்ப்பதிலே ஒரு நிறைவான வெற்றி காண்கிறான். அப்படி எண்ணிப் பார்ப் பதிலேகூட ஒன்றை முழு அளவிலே எண்ணிப் பார்க்கிற ஒரு வாய்ப்பு கவிஞனுக்கு இருக்கிறது. ஒன்றை எண்ணிப் பார்க் கின்ற வாய்ப்பு எழுத்துக்கு இருக்கிறது என்று சொன்னால் அதை முழு அளவிலே ஆழமாக எண்ணிப் பார்க்கிற ஒரு வாய்ப்பு கவிதைக்கு இருக்கிறது. அவ்வாறு முழுமையாக எண்ணிப்பார்க்கிற வாய்ப்பு கவிதையிலே எப்படி வருகிறது