உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கலைஞரும் கவிதையும் 1981.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6 என்று கேட்டால் எங்கே கற்பனை கலக்கிறதோ அங்கேதான் முழுமை வடிவம் பிறக்கிறது. உண்மையான பகுத்தறிவுக்குக் கற்பனை தேவையில்லை என்று நண்பர்கள் வாதாடக் கூடும். பகுத்தறிவை வலியுறுத்துவதற்குக் கற்பனை தேவைப்படுகிறது. பகுத் தறிவை எண்ணிப் பார்க்கிற போது கற்பனை தேவை யில்லை. அந்தக் கற்பனை அளவோடு கூடிய கற்பனையாக இருக்கிறபோது பகுத்தறிவு சிறக்கிறது. தந்தை பெரியார் சொன்னதைத்தான் அறிஞர் அண்ணா எழுதினார் : அறிஞர் அண்ணா எழுதியவற்றைத்தான் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் பாடினார். ஆனால் பெரியார் சொன்ன போது - கேட்கிறபோது நம்முடைய அறிவிலே அது சென்று பதிகிறது. ஆனால் சில நேரத்திலே அது முழு அளவுக்கு நம்மை ஆட்கொள்வதில்லை. அறிஞர் அண்ணா அதை த எழுதுகிறபோது; நாம் அதைப் படிக்கிறபோது இன்னும் சற்று ஆழமாகச் சென்று பதிகிறது. புரட்சிக்கவிஞர் பாடியதைக் கேட்கிறபோது, அந்தப்பாட்டு நம்மையே உலுக்குகிறது. பெரியார் அறிவை உணர்த்துகிறார்; அறிஞர் அண்ணா உணர்ச்சியோடு கலக்குகிறார் ; புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் உள்ளத்தையே உருக்குகிறார். ஏனென்றால் அந்தக் கவிதையிலே கலக்கிற கற்பனை உள்ளத்தைக் குழைய வைத்து அந்த உணர்விலே இரண்டறக் கலந்து விடுகிறது. குக்கச் தலைசிறந்த எழுத்தாளர் கலைஞர் எனவே, அந்த வகையிலே எழுத்தாளர்களிலே தலை சிறந்த எழுத்தாளராக விளங்குவதற்கான வாய்ப்பை கேட்பவர் உள்ளத்தை, படிப்பவர் உள்ளத்தை குலுக்குகிற, உலுக்குகிற அந்த உணர்வைத் தன்வயப்படுத்துகிற ஒரு பேராற்றலை எழுத்தாளன் பெறுகிறான். அப்படிப் பெறுகிற ஆற்றல் கலைஞரிடத்திலே மிகச் சிறந்து விளங்கிய