உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கலைஞரும் கவிதையும் 1981.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7 காரணத்தாலேதான் இங்கே தமிழ்க்குடி மகனார் அவர்கள் சொல்லுகிறபோது சொன்னார்; 'அவர் எப்பொழுதுமே தலைமை வகிக்கிற அந்த வாய்ப்பைத்தான் பெற்றிருக் மற்றவர்கள் தலைமையில் அவர் பாடியதில்லை. கிறார். அப்படி ஒரு வாய்ப்பை அவர் தேடிக் கொள்ளவில்லை" என்று. உண்மையிலே கலைஞருக்குத் தலைமை வகிப்பது எப்படி, மற்றவர்களை யெல்லாம் தலைமை வகித்து நடத்துவது எப்படி என்பது தெரியும். அவரவர் தகுதி, என்ன என்பதை அறிந்து நடக்கிற ஒரு தலைமை அவரிடத்திலே இருந்த காரணத்தினாலேதான், அவர் வருகிறபோது இன்னொருவர் தலைமை வகிக்கக் கிடைக்காமல் அவரையே தலைமை வகிக்கச் சொன்னார்கள். அருமையான கவிதை கூடப் பாடுவார்கள், தலைமை வகிக்க முடியாதவர்களாக இருப்பார்கள். ஆனால் கலைஞர் அவர்களிடத்தில் தலைமை வகிப்பதற்கான தகுதி இருந்தது. அந்தத் தகுதி கவிதை அரங்கிலே தலைமை வகிப்பதற்கான தகுதியையும் அவரிடத்திலே ஏற்படுத்தியிருக்கிறது. தலைமை உருவாவது எப்படி? இன்னும் ஒன்றை நான் உங்களுக்கு நினைவூட்ட விரும்புகின்றேன். தலைமை என்பது அருமையான கவிதை பாடினால் மட்டும் வராது. அருமையான கதை எழுதினால் மட்டும் வராது - தென்னரசு அவர்களுக்காக நான் சொல்ல வில்லை! (சிரிப்பு) அல்லது பேசுகிறபோது வெட்டு ஒன்று துண்டு இரண்டு என்று பேசுகிற காரணத்தாலே மட்டும் வராது - அது சுப்பு அவர்களுக்காக நான் சொல்லவில்லை! (சிரிப்பு) அல்லது எண்ணுகிற போது விரிவாக எண்ணுகிற போது விரிவாக எண்ணுகிற காரணத்தாலே மட்டும் வராது. எனக்காக நான் சொல்லவில்லை. ஆகவே இவைகளெல்லாம் சேர்ந்து ஒன்றாகத்திரண்டு வருகின்ற ஒருதிறமை என்று சொல்லத்தக்கவகையில் பல்வேறு குணங்கள் பல்வேறு இயல்புகள் பொருந்தி வருகிறபோதுதான் அந்தத் தலைமை