8 வரும். தலைமை கூடப் பலபேருக்கு வந்துவிடும், சிலபேர் அகில இந்திய ஜனநாயகக் கட்சிக்குத் தலைவர் கிடைக்காத காரணத்தால் திடீரெனத்தலைவராவார்கள். எனவே தலைமை வரும். சில பேருக்குப் பள்ளிக்கூடத்திலே கூடத்தலைமை வரும். சில பேருக்குத் தலைமை ஒரு நல்ல இசையரங்கத்திலே கிடைக்கும். அப்படித் தலைமை பல்வேறு விதத்திலே வரும். ஆனால் மக்கள் விரும்புகிற தலைமையாக அது மலராது. மக்கள் விரும்புகிற தலைமையாக மலரவேண்டுமானால் மக்களுக்காகத் தொண்டாற்றுகின்ற ஒரு ஆர்வம்-எண்ணிப் பார்க்கிற ஒரு மனப்பான்மை-அவர்களுக்காக உழைக்கின்ற ஒரு எண்ண ஓட்டம் - தியாகம் செய்கின்ற பக்குவம் இவை களெல்லாம் இருக்கின்ற போதுதான் அந்தத் தலைமைத் தகுதி உருவாகிறது. தந்தை பெரியாரிடத்திலே ஒரு தலைமை உருவாயிற்று என்று சொன்னால் அதற்கு அடிப்படை அவர் தனக்காக வாழவில்லை என்பது. அவர் என்ன பேசினார்? எப்படி பேசினார்? எவ்வளவு பேர் ஏற்றுக் கொண்டார்கள்? அது அல்ல முக்கியம். பெரியார் அவர்கள் தனக்காக வாழாதவர் மற்றவர்களுக்கு வாழ்வளிக்கப்பாடுபடும் மனப்பான்மையை வளர்த்துக் கொண்டவர். மேலும் பொது மக்களுக்கு தொண்டாற்றுவதற்காகவே வாழ்கிறவர் என்று பொது மக்கள் ஏற்றுக்கொள்ளக்கூடிய தகுதியைப் பெற்றவர். அது அவருடைய தலைமைக்குக் காரணம். அறிஞர் அண்ணா அவர்கள் அதே வகையிலே, பெரியார் பெற்ற தலைமையைப் போல அறிஞர் அண்ணா பெற வில்லை. அறிஞர் அண்ணா அவர்கள் மக்களுக்கு வழி காட்டுகிற அறிவு ஆற்றல் மிக்கவர். மக்களை எல்லாம் இணைத்துச் செல்லக் கூடியவர். எல்லா மக்களும் ஏற்கக் கூடிய அளவறிந்து அந்த வகையில் தமது கொள்கையை விளக்கியவர். மக்களுக்காக வாழ்கிற, வழிகாட்டுகிற என்ற இரண்டு ஆற்றலிலேயும் அண்ணா சிறந்தவர் என்ற அந்த
பக்கம்:கலைஞரும் கவிதையும் 1981.pdf/15
தோற்றம்