9 எண்ணத்தாலே அறிஞர் அண்ணா அவர்களுடைய தலைமை தமிழகத்திலே சிறந்தது. அறிஞர் அண்ணாவைவிட ஏறத்தாழ அவருக்கு ஈடாக அழகாகப் பேசிய பேச்சாளர்கள் அவர்கள் அந்தத் ஒவ்வொரு பலபேரை நான் அறிவேன். அவர்களுக்கு அந்தத் தலைமை கிடைக்கவில்லை. அறிஞர் அண்ணாவிற்கு முன்னாலே அழகொழுக எழுதுகின்ற ஆற்றல் மிக்க பல எழுத்தாளர்கள் பலபேரை நான் அறிவேன். தகுதியைப் பெறவில்லை. அறிஞர் அண்ணா அந்தத் தலைமையைப் பெறுகின்ற தகுதியைப் பெற்றார். சில பேருக்கு ஒருவகைத் தகுதி கிடைக்கிறது. யாராவது ஒரு ஒரு தலைவர் பின்னாலே போவதற்கான தகுதி. சிலபேர் சிலபேர் ஒவ்வொரு தலைவராக மாற்றிக் கொண்டுகூடப்போய் இருக்கிறார்கள். அது அவர்கள் கண்ட அரசியல் அனுபவமே! இவன் இந்தநாள் வரை யிலேதான் தலைவனாக இருக்க தகுதியுடையவன். எனவே இன்னொருவரைத் தலைவராகப் பெற்றுக் கொள்ளலாம். நமக்கு ஒரு நல்ல தலைவன் தற்காலிகமாகத் தேவை என்று சொல்லக்கூடியவர்கள் பலபேர் உண்டு. ஆனால் அறிஞர் அண்ணா அவர்கள் தந்தை பெரியாரைத் தவிர வேறு எவரையும் தலைவராக ஏற்றுக் கொள்ளவில்லை. அதுவே தான் அவருடைய தனித் தலைமையின் தனிப் பெரும் பகுதி. எனவே அந்த வகையிலே நீங்கள் எண்ணிப் பார்த்தால் கலைஞர் அவர்களுடைய தகுதி, தந்தை பெரியாருடைய உணர்வுகளும் பேரறிஞர் அண்ணா அவர்களுடைய உணர்வு களும் இரண்டும் கலந்து செயற்படும் ஒருவராக இருக்கின்ற காரணத்தாலே அந்தத் தகுதி அவரிடத்திலே பிறந்தது. (கைதட்டல்) பெரியார்-அண்ணா வழியில் கலைஞரின் தலைமைத்தகுதி. தந்தை பெரியாரைப்போல உறுதி, அழுத்தம்! பேரறிஞர் அண்ணாவைப்போல எடுத்துச் சொல்வதிலே ஒரு மென்மை;
பக்கம்:கலைஞரும் கவிதையும் 1981.pdf/16
தோற்றம்