உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கலைஞரும் கவிதையும் 1981.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எ 10 ஒரு நயம். தந்தை பெரியாரைப்போல கொள்கைக்காக வாதிடுகிற மனப்பான்மை ; அறிஞர் அண்ணாவைப்போல எதையும் ஏற்றுக்கொள்ளும்படியாக எடுத்துச் சொல்ல வேண்டும் என்ற நோக்கம், தந்தை பெரியாரைப்போல நாள் முழுவதும் உழைக்கிற அந்த ஆர்வம். பேரறிஞர் அண்ணா அவர்களைப்போல இரவெல்லாம் படித்து எழுத வேண்டும் என்ற அந்த நாட்டம் இப்படி அறிஞர் அண்ணா அவர்களும், தந்தை பெரியார் அவர்களும் எந்தெந்த வகையிலே கலைஞராலே அவர்களைப் பின்பற்ற முடிந்ததோ அந்த வகையிலேயெல்லாம் அந்த இருவரையும் பின்பற்றிய காரணத்தினாலேதான் கலைஞர் ஒரு தலைவரானார். கலைஞர் அவர்கள் ஒரு இளைஞனாகத் திருவாரூரிலே உயர் நிலைப்பள்ளி மாணவராக இருந்து, அதற்குப் பின்னர் இயக்கத்திலே ஒரு தொண்டராக அலைந்து, பேச்சாளராக வளர்ந்து, தந்தை பெரியாருடைய 'குடியரசு' ஏட்டிலே எழுத்தாளராகப் பணியாற்றி, பின்னர் கலைத்துறையிலே சேர்ந்து அதிலே சிறந்த உரையாடல் எழுதித்தருகிற வசன ஆசிரியராகப் பணியாற்றி, பின்னர் முரசொலி ஏட்டினை வார ஏடாகத் தொடங்கி அதன் மூலமாக இயக்கப் பணியாற்றி பின்னர் இயக்கத்திலே கழகத்தினுடைய பொருளாளராக அமர்ந்து பின்னர் அறிஞர் அண்ணா அவர்கள் விரும்புகிற அந்த எண்ணங்களை யெல்லாம் புரிந்து கொண்டு செயற் பட்டு இயக்கவளர்ச்சிக்காகத்தன்னை ஒப்படைத்து எத்தனையோ போராட்டங்களிலே ஈடுபட்டு, போராட்டத் திலே ஈடுபடுகிறபோது அதே ஊரிலிருந்து அதற்குப்பின்னர் சிறைச்சாலைக்குச் செல்ல வேண்டிய நிலைமை ஏற்பட்டால் அதனை ஏற்று, அதிலே எத்தனைத்தொல்லைகள் வந்தாலும் அவற்றைத் தாங்கிக் கொண்டு, தன்னுடைய குடும்பத்தை யேகூட இந்த இயக்கத்தினுடைய கிளைக்கழகத்தைப்போல அமைத்துக் கொண்டு அதன் மூலமாக இயக்கத்தோழர் களுடைய நம்பிக்கைக்கு உரியவராக ஆகி அறிஞர் அண்ணாவின் பாராட்டைப் பெற்று அமைச்சராகி, அதன் பின்னர் இயற்கையின் நிகழ்ச்சியினாலே முதலமைச்சராகி