உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கலைஞரும் கவிதையும் 1981.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12 காரணம்? அதை ஆராய்கிறபோது கலைஞரை முழு அளவிற்கு ஆராய்கிற வாய்ப்பு நமக்கு கிடைக்கும் இங்கே நம்முடைய அருமை நண்பர்கள் இந்த நூலிலே கட்டுரையாகத் தீட்டியிருக்கிற அந்தக் கருத்துக்களின்படி பார்த்தால் கலைஞர் கவிதைகளிலே கலைஞருடைய பாணி- அமைப்பு என்ற ஒன்றை நமது தமிழ்க்குடிமகன் அவர்கள் ஆராய்ந்து இருக்கிறார். கவிதையின் பாணி என்பது இலக்கியத்திலே வல்லுநராக இருக்கிற புலவர்கள், இலக்கணத்திலே சிறந்தவர்களாக உள்ளவர்கள் காலாகாலத்திலேயும் கவிதையினுடைய மரபு எப்படியெல்லாம் வளர்ந்து வந்திருக்கிறது என்ற கண்ணோட்டத்திலே ஆராய்வது. முஸ் . இலக்கண வழிக் கவிதையும் புதுக் கவிதையும். ஒரு காலத்திலே கவிதைகள் முழு அளவுக்கு இலக்கணக் கட்டுப்பாடோடு அமைவது அவசியமாக இருந்தது. அவற்றுக்கு இரண்டு காரணம். ஒன்று கவிதைக்குப் பாது காப்பு. மற்றொன்று மக்கள் கவிதையைப்பாடபேதமுறாமல் பாதுகாக்க அது ஏற்புடையது. அக்காலத்திலே கவிதைகள் இயற்றப்பட்டவுடன் அச்சேற்றப்படுகிற நிலைமை இல்லை. கவிஞன் பாடுவான். எழுதி வைக்காமல் கூட விட்டுவிடுவான். இன்னும் இரட்டைப் புலவர்கள்போலே முதல் இரண்டடி ஒரு புலவன் பாட, பின் இரண்டடி மற்றொரு புலவன் பாடுவானேயானால் இரண்டு பேரும் மறந்தாலும் மறக்கலாம். இரண்டு பேருமே மறுபடியும் பாடி அதை நிறைவு செய்தாலும் அப்படிப்பட்ட காலத்தில் ஓலைச் சுவடிகளில் எழுதி வைக்கப் படுவது என்ற அளவுக்கு மட்டுமே ஓரளவு பாதுகாக்கப்பட்ட காலத்தில் ஓலைச் சுவடிகளில் உள்ள எழுத்துக்கள் பல நேரத்திலே தெளிவாக அறிய முடியாத நிலை அமைவதுண்டு. அச்சு இயற்றுகிற காலத்திலே பொறி களாலே அச்சு இயற்றப்பட்டுக் காணப்படுகின்ற பொழுது,