13 அந்த எழுத்துக்கள் பிரிந்து காணப்படுவதைப் போல சொற்கள் பிரிந்து நிற்பதைப்போல அசை அசையாகக் கூடப் பிரித்துக் காட்டுவதற்கு வாய்ப்பு இருப்பதைப்போல இல்லாத காலத்தில் தொடர்ந்து எழுதுகிற போது, அதுவும் கூட்டு எழுத்துக்கள் கொண்டு எழுதப்படுகின்ற காலத்தில் ஒரு கவிதையிலே வருகின்ற சொல், இந்தச் சொல்தானா அவர் பயன்படுத்தியது? அவர் 'கல்' என்று சொன்னாரா? 'கள்' என்று சொன்னாரா? அவர் 'வால்' என்று சொன்னாரா? 'வாள்' என்று சொன்னாரா? என்று ஐயம் வருகிறபோது பல்வேறு ஐயங்களை நீக்கிக் கொள்வதற்கு உறுதுணையாக- அவசியமாக இருந்த ஒரு அடிப்படையில் இலக்கண முறை யோடு அசை, சீர், தளை இவற்றையெல்லாம் கண்டு எழுதி வருகின்ற முறை பெருமளவிற்குப் பயன்பட்டது; இன்றி யமையாததாகவும் இருந்தது. ஆனால் இன்று அப்படி அல்ல. இங்கே நண்பர்கள் பேசுகின்ற பொழுது புதுக் கவிதையைப் பற்றிச் சொன்னார்கள். புதுக்கவிதை என்று சொன்னால், அது கருத்துகளாலே புதுக்கவிதை என்று ஒருவகையிலே சொன்னால் நான் ஓரளவு ஏற்றுக் கொள்ளத்தயார். ஏனென்றால் சில எண்ணங்களைச் சில காலத்தில் சில முறை களிலே வெளியிடுகிறபோது அது புதுமை பெறுகிறது. அதே எண்ணத்தை இன்னொரு காலத்தில் வெளியிட்டால் அது புதுமை பெறாது. இன்றைக்கு ஒன்று புதுமையாகத் தோன்றும். அது நாளைக்குப் புதுமையாக இருக்காது. ஆகவே புதுக் கவிதைகள் எல்லாம் நிச்சயமாக நீண்ட காலம் நிலைப்பது என்று நான் கருதமாட்டேன். ஆனால் தற்போது அது புதுக்கவிதைதான்! ஒரு பெண் நிறைவெய்து கிறாள் அல்லது புதுமை பெறுகிறாள் அல்லது மலர்ச்சி எய்துகிறாள் என்று சொன்னால் அந்த கால கட்டத்திலே அதற்கு மதிப்பு; அதுபோல புதுக்கவிதை என்று சொல்வது ஒரு கால கட்டத்திலே அது புதுக்கவிதை. இன்னும் ஒரு
பக்கம்:கலைஞரும் கவிதையும் 1981.pdf/20
தோற்றம்