உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கலைஞரும் கவிதையும் 1981.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14 இருபதாண்டுகள் கழித்து அந்தக் கருத்துகளை நோக்குகிற போது அது சிறப்புடையதாக இருக்குமா? என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால் மக்களுக்குத் தேவைப்படுகிற ஒரு எண்ண ஓட்டத்தை - ஒரு புரட்சி மனப்பான்மையை ஒரு புதுமைச் சிந்தனையை - ஒரு வேகத்தை அல்லது உள்ளக் குமுறலைப் படம் பிடித்துக்காட்டுகின்ற ஒரு ஆற்றலைப் புதுக்கவிதை பெற்றிருக்கிறது என்று சொன்னால் எனக்கு இல்லை. மாறுபாடு அழகு கவிதையுடன் பிறந்தது அழகில்லாதது கவிதையல்ல! ஆனால் கவிதைகளிலே வருகிற கருத்துக்களிலே உள்ள அழகு என்பது நீண்ட நெடுங்காலமாக அது கவிதையோடு உடன் பிறந்தது. அழகு இல்லாத போது அது கவிதை அல்ல; நயம் இல்லாத போது அது 'பா' அல்ல ; ஓசையில்லாத போது அது பாட்டு அல்ல; எனவே அழகு என்பது இயற்கை யோடு பொருந்தியது; கவிதையோடு உடன் பிறந்தது. அழகில்லாத கவிதை என்றைக்கும் பிறந்ததில்லை; பிறந் திருந்தாலும் அது வாழ்ந்ததில்லை. சங்ககாலத்திலே பிறந்த கவிதைகளாக இருந்தாலும் இடைக்காலத்திலே நாயன்மார்கள் பாடிய பாடலாக இருந் தாலும், வள்ளலார் அருட்பாவாக இருந்தாலும்- அத்தனையும் கவிதை நலன்களுக்கெல்லாம் எடுத்துக் காட்டாக விளங்குவனவே; கருத்துக்களிலே வேறுபாடு வரலாம். இறைவனை வேண்டி வேண்டி உருகிப்பாடி என்னபயன்? என்று நம்முடைய புலவர்கள் கேட்கலாம் அல்லது பகுத்தறிவு வாதிகள் கேட்கலாம். ஆனால் பாடியவனுடைய பாட்டி னுடைய ஆழமான கருத்துக்கள்; அவ்வளவு சிறந்த எண்ணங் கள். அந்த எண்ணங்களை நாம் மறந்துவிட முடியாது.