18 கிற எழுச்சியூட்டுகின்ற அந்த ஆற்றல் கலைஞருடைய கவிதைகளிலே நிரம்பக் காணப்படுகிறது. அதைத் தமிழ்க் குடிமகன் அவர்கள் வரவேற்றுப் பாராட்டியிருக்கின்றார். அவருடைய கவிதைகளிலே காணப்படுகின்ற உவமை நயம் குறித்து டாக்டர் விநாயகமூர்த்தி அவர்கள் எழுதியிருக்கிறார்கள். கலைஞர் பாடல்களிலே யாப்பு எப்படி அமைகிறது என்பது பற்றி, அந்த யாப்பு எளிய முறையிலே அவரால் எப்படி கையாளப்படுகிறது என்பதைப் பற்றிப் பூங்காவனம் அவர்கள் எழுதியிருக்கிறார்கள். அவருடைய கற்பனை வளத்தைப் பற்றி நம்முடைய தோழர் மலைச்சாமி எம்.ஏ. அவர்கள் கட்டுரையாக வடித்திருக் கிறார்கள். கலைஞர் கவிதைகளிலே பகுத்தறிவு பற்றி அறிவரசன் அவர்கள் எழுதியிருக்கிறார்கள். அவர் கவிதை களிலே புரட்சிக்கவிஞர் எப்படி நடமாடுகிறார் என்பதை இளமாறன் எடுத்துக்காட்டுகிறார். இனநலத்தை அவர் எப்படிப் போற்றுகிறார் என்பதைக் கண்ணையன் அவர்கள் எடுத்துக் காட்டுகிறார். கலைஞர் கவிதைகளும் அவை காட்டும் மொழி உணர்வும், அதைக் குறித்து நம்முடைய நண்பர் காசாமைதீன் அவர்கள் எழுதியிருக்கிறார். கலைஞர் கவிதைகளிலே குறள் எப்படி இடம் பெற்றிருக்கிறது என்பதை நம்முடைய திருமாறன் அவர்கள் எழுதியிருக் கிறார். இவையெல்லாவற்றையும் சேர்த்துப்பார்ப்பதாக இருந்தால் கலைஞருடைய கவிதைகள் வடிவு பெற்ற அடிப்படை நமக்குத் தெரியும். அண்ணா வழியில் கலைஞர் தீட்டிய சுவைமிகு கவிதை கலைஞரை இப்படி இப்படிப் பிரித்துப் பார்ப்பதைவிட தொகுத்துப் பார்க்கிறபோது ஒரு முழுவடிவம் தெரியும் என்று சொன்னேன்; அந்த வடிவத்தை நான் எதில் காண்கிறேன் என்றால், அவரே 15. 9.75-இல் 'அண்ணாவழியில்' என்ற தலைப்பிலே ஒரு கவிதை தீட்டியிருக்கின்றார். அந்தக்
பக்கம்:கலைஞரும் கவிதையும் 1981.pdf/25
தோற்றம்