19 கவிதையைப் படித்தால் அதிலே கலைஞர் கருணாநிதி உடன் நடந்து வருவார். அந்தக் கவிதையிலே, தமிழே! தேனே! தங்கக் கனியே! அமிழ்தே! அன்பே! அழகுக் கலையே! எழிலே! அறிவே! எண்ணச் சுடரே! பொழிலே! புகழே! பொன்னின் மணியே! திருவே! உருவே திங்கட் குளிரே! மாணிக்கவாசகர் வருகிறார். வடலூர் வள்ளலார் வருகிறார் இன்னும் தமிழ்ப்பண்பாளர்கள் பாடிய அந்தச் சொற்ளெல்லாம் இடம் பெறுகின்றன. தருவே! நிழலே! நிழல்தரு சுகமே! தாயே! உன்றன் தாளினைப் பற்றி இது கலைஞர் கருணாநிதி அவர்கள் தமிழ்த்தாயினை உள்ளத்திலே கொண்டுதான் இந்தத் தொண்டெல்லாம் செய்கிறார் என்பதற்குச் சான்று! 'தாயே உன்றன் தாளினைப்பற்றி' அப்பொழுதும் தமிழ்க் கவிதையைப் பாடிடவரவில்லை. 'தலைமைக் கவிதை பாடிட வந்தேன் என்கிறார். அது அவருடைய சொந்த வடிவம் (சிரிப்பு) இந்தத் தலைமை என்பது அவரோடு பிறந்தது. சிலபேருக்குக் கூடவே பிறக்கும். (கைதட்டல்) எனவே, 'தலைமைக் கவிதை பாடிட வந்தேன்' என்பது இயல்பாகவே பொருந்துகிறது. 'அண்ணா வழியில் அயரா துழைக்கப் பண்ணால் முழங்கிப் பயணம் தொடரக் கண்போல் கழகம் காக்கும் சூளுரை விண்போய் முட்டிட உரக்கக் உரக்கக் கூவுக !' அவருடைய உணர்வு இதில் வெளியிடப்படுகிறது. 6 அண்ணாவழியில் அயரா துழைக்கப் பண்ணால் முழங்கி, அது வெற்றுச் சொல்லாய் முழங்காமல், 'அண்ணா நாமம்.
பக்கம்:கலைஞரும் கவிதையும் 1981.pdf/26
தோற்றம்