20 வாழ்க என்று சொல்லாமல் (சிரிப்பு) 'பண்ணால் முழங்கிப் பயணம் தொடர, 'பயணம் என்பது கடுமையான பயணம், எனவே, அந்தப் பயணத்தைத் தொடர்ந்து நடத்த' கண் போல் கழகம் காக்கும் சூளுரை விண்போய் முட்டிட உரக்கக் கூவுக!" ஏன் விண்போய் முட்டிட என்றால் அண்ணாவுக்கும் கேட்கும்படி விண்போய் முட்டிட உரக்கக் கூவுக' என்று நண்பர்களுக்கு சொல்கிறார். 'இன்றைக்கு நடந்ததுபோல் இருக்குதய்யோ!-கழகக் கன்றைவிட்டுப் பசுபிரிந்த அந்தக் காட்சி. குன்றைத் துளைக்குமொரு வேலெடுத்துக் குறிபார்த்து நெஞ்சைக் கிழித்ததுபோல் என்றைக்கும் நம்மைவிட்டுப் பிரியாத அண்ணன் அன்றைக்கு மறைந்துவிட்டான்; அய்யகோ! ஆயிற்று ஏழெட்டாண்டு! 'கொன்றைவேந்தன்' என அவ்வையின் பாட்டுண்டு; நம் கொள்கை வேந்தனுக்கோ அழியாத பாட்டுண்டு! பொங்குகடல் நடையும் பூவையரின் மென்னடையும் தன் புதுத்தமிழ் நடையில் காட்டியவன் பொல்லாங்கு உரைப்போரை வாதத்தில் மாட்டியவன்! பொடியெடுத்துப் போடும் நேரம் புன்னகையால் எதிரிகளைப் பொடியாக்கி வாட்டியவன்! புழுதிக்குணம் படைத்தோரை ஓட்டியவன்! (சிலபேர் மிச்சமிருந்து பின்னாலே ஓடினார்கள்) பொன்மகுடம் தமிழ்த்தாய்க்குச் சூட்டியவன் எழுதுகோல் வைத்திருந்தான் அண்ணன் - அது ஏமாந்த தமிழர்களின் தலையெழுத்தை மாற்றத் தாளில் உழுத கோல் நம் நாளில் அழுதவரைச் சிரிக்க வைக்க அவன் தந்த ஆட்சிக்கோல் குதிகால்கள் பரதம் ஆடப் பேச்சரங்கில் கொய்யாத் தமிழ் எடுத்துக் கொடுத்திட்டார்!
பக்கம்:கலைஞரும் கவிதையும் 1981.pdf/27
தோற்றம்