21 சதிகாரர் சாய்க்கின்றார் தமிழ் மொழியை என்ற போது அவர், மொழிப் போரின் மூலபலம்! களம்கண்டு விழிப்போரைக் கண்டுகொண்டு - தன்னைப் பழித்தோரைப் பாராட்டும் பண்பாளர். அழித்தாராம் ஆதிக்க மொழி வெறியை பலகார பட்சணம் - பாணிக்கிரகணம் வதூவர கிரகப்பிரவேசம் பந்துமித்திரர் நமஸ்காரம் - உபய குசலோபரி நாமாவளி துவஜா ரோகணம் என நாக்குக்கு நுழையாத வடமொழிப் படையெடுப்பால் வாக்குக்குச் சுவை சேர்க்கும் வண்ணத் தமிழ் பாக்குக்கும் வெற்றிலைச் சுண்ணாம்புக்கும் வாடுவதோ? தாக்குதற்குத் தமிழைப் பிறமொழி பெருகிவந்தால் அவர் வாய் சிவக்கும் அவர்கண் சிவக்கும் அக்ராசனாபதியை அவைத்தலைவராய் உலவவிட்டார். அந்தநாள் பிரசங்கம் சொற்பொழிவாய் மாற்றிற்றின்று! நமஸ்காரம் கிமஸ்காரம், எல்லாம் நலமான தமிழிலே நல்வணக்கமாய் மலர்ந்தது காண்! தூய்மையாய்த் தமிழில் கொடியேற்று விழா வந்த பின்னர் துவஜாரோகணத்துக்கு அங்கென்ன வேலை? வாய்மையே வெல்லுமென்றால் 'சத்யமேவ ஜெயதே' கோபித்தா கொள்ளும்? அண்ணனை ஒரு சீமான் என்பேன் ! அவர் நண்பர்களையே செல்வமாய்ப் பெற்றிருந்தார்! அண்ணனை ஒரு துறவி என்பேன்! அவர் வாயெல்லாம் காவி தரித்திருந்தார். அண்ணனை ஒரு தெய்வம் என்பேன் !
பக்கம்:கலைஞரும் கவிதையும் 1981.pdf/28
தோற்றம்