22 அவருக்குத் துரோகிகளும் தூபதீபம் காட்டுகின்றார் ! அண்ணனை ஒரு கண்ணன் என்பேன்! அவரைப் பூதகியும் தூக்கிப்பால் கொடுக்கின்றாள்! அரியாசனமாய் அவர் நம் இதயத்தை ஆக்கிக் அரியா சனங்கள் அவரை ஆரம்பத்தில் புரியாமல் எதிர் ததுண்டு!- சரியாசனச் சமதர்மம் போதிக்க வந்த தென்னாட்டு மார்க்ஸ் என்று பின்னால்தான் தெளிவடைந்தார். நரியும் பரியாய்ப் பரியாய்ப் போனகதை, நாரதர் பெண்ணாய் ஆனகதை, உரியைக் கண்ணன் உடைத்தகதை, ஊரார் போற்றிய பழையகதை! எரியில் துரும்பாய் ஆக்கியவர் பெரியார் தந்த பேரறிஞர் ! கொண்டார் 'பெரியார் தந்த பேரறிஞர்' என்று அறிஞர் அண்ணாவை, அவரைப் போற்றுகிற வகையிலே எடுத்துச் சொல்லுகிற அந்த வழியிலேயே கலைஞர் கருணாநிதி, 'பெரியார் போற்றிய, பெரியார் தந்த பேரறிஞர் வழிவந்தவர் கலைஞர் கருணாநிதி' என்று சொல்லத்தக்க வகையில் கலைஞருக்கே ஒரு முன்னுரையாக, தான் எந்த ஒரு இலட்சியப் பாதையிலே நடைபோடுகிறோம் என்ற எண்ணத்தை முழு வகையிலே எடுத்துக்காட்டுகிற பகுதி இது. மேலும் சொல்லுகிறார்; இரக்கமெனும் ஒரு பொருளிலே அரக்கனென இராவணனைக் கம்பன் இகழ்ந்தது செல்லாதென உருக்கமிகு ஓவியத்தை எழுத்தால் தீட்டிச் சுருக்கென்று தைக்கின்ற கேள்விகளால் தேவலோகப் பிறவிகளைத் தெருவுக்கு இழுத்து வந்தார். மேனிப்பசி முழுதும் தீர்ந்த பின்னர் மேனகையைக் கைவிட்ட மாமுனியும்
பக்கம்:கலைஞரும் கவிதையும் 1981.pdf/29
தோற்றம்