உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கலைஞரும் கவிதையும் 1981.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24 வணக்கம் ! ! என்று அந்தக்கவிதையைச் சொல்லி முடிக்கின்றார். அந்தக் கவிதையிலேதான் கலைஞருடைய உள்ளுணர்வாலே அறிஞர் அண்ணாவின் வழியிலே நடப்பதற்கு உறுதி பூண்டவர் என்பதை முழுவகையில் காண முடியும். அந்த உணர்வுதான் இன்றைக்கு அவருடைய கவிதைகளுக்குப் பெருமை. இந்த உணர்வு இல்லாதவர் கவிதை இயற்றுவாரே ஆனால் அந்தக் கவிதை சிறக்காது. நான் இங்கே அந்த அந்த ஒன்பது ஒன்பது நவரசங்களைத் தேடித் தந்த இந்த நவமணிகளாக இருக்கிற அந்தப் புலவர் களுங்கூட அறிஞர் அண்ணாவைப் போற்றி பெரியாரை வாழ்த்தி, அந்த உணர்வுகளை மக்களிடத்திலே தொடர்ந்து எடுத்துச் சொல்லுகிற ஒரு கடமையை கலைஞர் செய்யாமல் வேறு வகைக் கவிதைகளை இயற்றி இருப்பாரேயானால் இப்படிப் பாராட்டி இருப்பார்களா என்பது ஐயந்தான்! கவிதைகளில் உள்ள ககுத்துக்களே நமக்கு உயிர்ப்பொருள் கவிதைகளல்ல ; கவிதைகளிலே உள்ள கருத்துக்கள் தான் இன்றைக்கு நமக்கு உயிர்ப் பொருளாக இருக்கின்றன. கவிதைகள் சில நேரத்திலே நம்மை ஏமாற்றி இருக்கின்றன ; கவிதைகள் நம்மைத் தாழ்த்தி இருக்கின்றன; கவிதைகள் நம்மைக் கைவிட்டிருக்கின்றன. அந்தக் கவிதைகளுடைய வரிசையிலே கலைஞருடைய கவிதை இடம் பெறவில்லை. காரணம், அவர் அறிஞர் அண்ணா மறைந்தபோதே கூட, சமுதாயத்திற்காக -நாட்டிற்காக தன்னை ஒப்படைத்துக் கொள்கிற உணர்வு காரணமாக அறிஞர் அண்ணா அவர் களுக்கு, இரங்கல் கவிதை பாடுகிறபோதே அதிலேயும். அறிஞர் அண்ணா அவர்களே உங்களுடைய இதயத்தை இரவலாக எனக்குத் தாருங்கள். நான் மறுபடியும் தங்களிடத்திலே வந்து சேருகிறபோது, அந்த இதயத்தைத் திரும்பத் தருகிறேன்" என்று கவிதையிலே பாடுவதன் 66 -