25 மூலமாக, அந்த உணர்வுகளைத் தன் உள்ளுணர்வுகளாகப் பெற்றுக் கொண்டவர் என்பதை நீங்கள் எண்ணிக் கொள்ள வேண்டும். - அதேபோல அவர் எந்த வகையிலே தன்னை வளர்த்துக் கொண்டார் என்றால், அவர்படித்த அளவுக்கு தொடர்ந்து இலக்கியங்களைப் படிக்கின்றவர்கள் பல பேர் இல்லை; சிலப்பதிகாரமோ சீவகசிந்தாமணியோ புறநானூறோ -திருக்குறளோ அவற்றைத் தொடர்ந்து படித்து, எண்ணியெண்ணி - உணர்ந்து உணர்ந்து - போற்றிப் போற்றித் தன்னுடைய உணர்வுகளுக்கு அதை விருந்தாக்கி- அந்த உணர்வை மற்றவர்களுக்கு விருந்தாக்குவதற்காக, அந்த உணர்வை வடித்துத் தந்து, அப்படிக்கலைஞர் அவர்கள் தன்னையே உருவாக்கிக் கொண்டவர்கள். அப்படி உருவாக்கிக் கொண்ட காரணத்தாலேதான் சிலப்பதிகாரத் தைப் பற்றி அவர் பாடுகிறபோது கருத்துவளத்துடன் ஓசை நயமும் அங்கே பிறக்கிறது. ஒரு வகையிலே அவர் சொல்லுகிறார். 'வீரர்க்கு நெஞ்சில் வியப்புத்தோன்றும் உவகையும் அழுகையும் ஒருதாய் மக்கள் ஒருவரை ஒருவர் நிழல்போல் தொடர்வர் இந்த 1 எட்டுச்சுவை பிட்டுத்தமிழ் கட்டித்தயிர் வட்டில் நிறை கொட்டித் தர பட்டுக்கொடி கொற்றக்குடை முத்துச்சர சோழனூர் வருவீரே
பக்கம்:கலைஞரும் கவிதையும் 1981.pdf/32
தோற்றம்