உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கலைஞரும் கவிதையும் 1981.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுவைவிளக்கம் 26. தருவீரே -என, அந்த ஓசை நலத் தோடும் அவர் பாடமுடிவதற்குக் காரணம், அந்த ஓசை நலத்திலே தன்னை ஈடுபடுத்திக் கொண்டவர். சிலப்பதி காரத்தைப் பற்றி அவர் பாடிய பாடலிலே ஒரு சிறு பகுதி யையே நான் எடுத்துக் காட்டினேன். The அணுகுமுறையில் பெரியாரும் அண்ணாவும் கிற தந்தை பெரியார் அவர்களைப் பற்றி அவர் பாடுகி போதும் அந்த அந்த உணர்வுகளை முழு அளவுக்கு எடுத்துக் காட்டுகிறார். அங்கேகூட ஒன்றைச் சொல்கிறபோதெல்லாம் நகைச்சுவை உணர்வுடன் அதனை மாற்றிச் சொல்லுகிற உணர்வு, ஒன்றை வேறுபடுத்திச் சொல்லி அதன்மூலமாக அதை உணரவைக்கின்ற உணர்வு - இவைகள் அவருக்கு இயல்பாக இருக்கின்ற காரணத்தாலே காரணத்தாலே அவர் அங்கே பெரியாரைப் பற்றிப் பாடுகிறபோது சொல்லுகிறார்; 'கவியெழுதும் ஆற்றல் எனக்குண்டென்ற காரணத்தால் கவியரங்கத் தலைமைக்குத் தூண்டுகோலாய்த் துணை நின்ற கணபதியை நினைக்கின்றேன் கவியரங்கம் தொடர் கின்றேன் ஆர்.வி. கணபதியை நினைக்கின்றேன் அழகுதமிழ்க் கவியரங்கம் தொடங்குகின்றேன் (ஆர். வி. கணபதி, கலைஞருடைய நண்பர்; மறைந்து போனவர், சேலத்திலே தமிழ்ச் சங்கம் தொடங்கியவர்) கணபதி என்று சொன்னவுடனே, மற்றவருடைய நினைவில் என்ன தோன்றுகிறதோ - அந்த உணர்வை ஏற்படுத்தித் தன்னுடைய நண்பனை நினைக்கின்றேன் என்கிறார். "பூமியிலே நம்மை வாழவைத்து வளரவைத்த சாமிதனை முதன்முதலில் தொழுதிடுவோம் இராம சாமிதனை முதன்முதலில் தொழுதிடுவோம் -பெரியார்