28 இருப்பார் என்று அடியார்களெல்லாம் சொன்னார்களே! அந்த ஏழைகளுக்கு நீ உதவி செய்வதிலே கடவுளை எண்ணு கிறவனாக இருந்தால் எனக்கு ஒன்றும் மாறுபாடு இல்லை" என்று அப்படித் தந்தை பெரியார் அவர்களே கூட ஒருகால கட்டத்திலே பேசியிருக்கிறார். ஆனால் அவருடைய அழுத்தமான ஒரு கருத்து கடவுள் உடன்பாட்டிற்குப் பின்னாலே தெளிவு பிறக்காது என்பது ! தந்தை பெரியாருடைய எண்ணப்படி கடவுள் உடன்பாட்டை முழுவதுமாக எதிர்த்தால்தான் தெளிவு தெளிவு பிறக்கும் என்று கருதினார். G ஆனால் அறிஞர் அண்ணா அவர்கள் கருதியது அது ஒரு கருத்து. இல்லையென்று சொல்வது அந்தக் கருத்து ஒன்றின் காரணமாக தெளிவு பிறப்பதற்கான தோற்றுவாயே இல்லாமல் போய் விடக்கூடியவர் பெரும்பாலோர். அந்தத் தோற்றுவாய் ஏற்பட்டு அவனவனாகத் தெளிவதுதான் உண்மையே தவிர, யார் சொல்லியும் கேட்டாலுங் கூடத் தெளிவு அவனுக்குச் சொந்தமில்லை. எனவே, அவன் வனுக்கு ஒரு தெளிவு பிறக்க வேண்டுமானால் தோற்றுவாயை அடைத்து விடக்கூடாது. எனவேதான் ஒன்றே குலம் ; ஒருவனே தேவன்' என்ற கருத்தை அறிஞர் அண்ணா அவர்கள் குறிப்பிட்டார்கள். கடவுள் உண்டா? இல்லையா? கடவுளுக்கும் கவலையில்லை; அறிஞனுக்கும் கவலையில்லை; இன்னும் சொல்லப் போனால் உண்மையான மக்கள் தொண்டனுக்கும் கவலை இல்லை; இரண்டும் இல்லாதவனுக்குத்தான் அதிகக் கவலை. என்பதைப்பற்றிக் 100 ஆகவே, அப்படிப்பட்ட ஒரு சூழ்நிலையில் கடவுளைப் பற்றிய கருத்திலே கூட ஒரு மாறுபாடு இருந்தாலுங்கூட, கலைஞர் அவர்கள் அறிஞர் அண்ணா அவர்கள் வழியைப் பின்பற்றி, ஒரு கோணத்திலே மக்களுடைய கவனத்தை இழுத்து, இன்னொரு கோணத்திலே தந்தை பெரியாரைப்
பக்கம்:கலைஞரும் கவிதையும் 1981.pdf/35
தோற்றம்