89 பற்றி அவர்களுக்கு நினைவூட்டுகிற முறையிலே அந்தக் கவிதையிலே பாடுகிறார். 'கவியரங்கம் பாடவந்த, காணவந்த பெருமக்காள்! திருவரங்கப் பெருமாள்போல் படுத்திருந்த தமிழுணர்வைத் திசையெட்டும் சிலிர்த்தெழுந்து முழங்கச் செய்து தீரமிகு பணிகள் பல ஆற்றியவர் பெரியாரன்றோ ?" தமிழ் உணர்வு திருவரங்கப் பெருமாள் போலப்படுத் திருந்தது ; எழுந்திருப்பதாக இல்லை. பெரியார்தான் அதை எழுந்திருக்கச் செய்தார் என்று சொல்லி தெருவரங்கம் கலையரங்கம் இசையரங்கம் எல்லாமே 'அம்மாமி அத்திம்பேர்' ஜலதரங்கம்! அதுமாற்றித் தமிழரங்கம் தனியரங்கம் கண்டவர்க்குக் கவியரங்கம் பாடுவது பொருத்தமன்றோ? திரையரங்கம் என்று அவர்பாடிய இந்தக் கவிதையை நீங்கள் எண்ணிப் பார்த்தாலும், கலைஞர் இடத்திலே கருத்து உண்டு; அதை எடுத்துச் சொல்லும் ஆற்றல் உண்டு; அதற்கு வடிவு தருகிற கலைத்திறன் உண்டு; அதை அழகுபடுத்துகிற கவியின் சிறப்பு உண்டு. இவற்றை நாட்டுக்குப் பயன் படுத்துகிற உயர்ந்த குறிக்கோள் உண்டு என்று காணலாம். கலைஞர் வழியில் இளைஞர்கள் இலட்சிய நடை போட வேண்டும். எனவே, குறிக்கோள் வாய்ந்த கலைஞர் கவிஞராகக் திகழ்வதிலே வியப்பில்லை. அவர் வழியில் தமிழ் இளைஞர்கள் அவருடைய இலட்சியத்தை ஏற்றுக்கொண்டு, வாழ்கிறவர்களாக அது மூலமாக அறிஞர் அண்ணா அவர்களும் தந்தை பெரியார் அவர்களும் தமிழுக்காக
பக்கம்:கலைஞரும் கவிதையும் 1981.pdf/36
தோற்றம்