உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கலைஞரும் கவிதையும் 1981.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30 தமிழ் நாட்டிற்காகப் பாடுபட்டு அவர்கள் ஆற்றிய பணி தொடர்ந்து இந்தநாட்டிற்குப் பயன்படச் செய்கிறவர்களாக இளைஞர்கள் விளங்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். இந்த அருமையான இலக்கியத் திறனாய்வு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த நண்பர்கள் எந்த உயர்ந்த நோக்கத் தோடு இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தார்களோ அதை எண்ணிப் பார்க்கும் மற்றவர்களெல்லாம் இலக்கியத்திலே ஆர்வம் கொள்ள வேண்டும். ஒன்று படிப்பது; மற்றொன்று படிப்பதை மற்றவர்களிடத்திலே எடுத்துச் சொல்வது எடுத்துச் சொல்வது- எழுதுவது! ஆழ்ந்த கருத்துக்களை - உயர்ந்த எண்ணங்களை குறிக் கோளை மற்றவர்களிடத்திலே பதியவைப்பது- குறிக்கோள் இழந்து நடக்கின்ற இந்த தமிழச் சமுதாயத்தை, குறிக்கோள் உடையதாக குறிக்கோளை ஏற்றுக் ஏற்றுக் கொண்டு செயல் படுவதாக ஆற்றல் நடைபோடச் செய்வது இவையெல்லாம் இளைஞர்கடன்; இவையெல்லாம் தமிழ்நாட்டு மக்களுடைய கடன் என்ற உணர்வை நீங்கள் வளர்ப்பதிலேதான் இந்த இலக்கிய அணியினுடைய பணி ஒளி பெறக்கூடிய நல்வாய்ப்பு இருக்கிறதென்று நான் நினைவூட்ட விரும்புகிறேன், - ச இன்னும் ஒரு பத்து நிமிடம் உணவிற்குக் காலதாமத மாகிறது என்று நீங்கள் கருதினாலுங்கூட, 'செவிக்குணவு இல்லாத போழ்து சிறிது வயிற்றுக்கும் ஈயப் படும்' என்னும் அந்தக் குறளுக் கேற்ப நீங்கள் விரும்புகிறேன். அத்திருக்க வேண்டும் என்று நான் செவிக்கு உணவு இருந்தால் மட்டும் நாடு வாழாது; அந்தச் செவி உணவு சுவையுடைய உணவாக இருந்தால் மட்டும் நாடுவாழாது ; பயனுள்ள உணவாக இருக்க வேண்டும்; சத்துள்ள உணவாக இருக்க வேண்டும் என்று உணவைப் பற்றிச் சொல்வதைப் போலத்தான் தமிழ்ச் சமுதாயத்தை வாழ வைக்கின்ற உணவாக செவி உணவு