31 தமிழகத்திலே முழங்கிக் கொண்டிருப்பதற்கு இலக்கிய அணி தேவை என்று நானும் கலைஞர் அவர்களும் கருதினோம். அதைப் பெருமளவிற்கு இலக்கிய அணியினர் நிறைவேற்று கிறார்கள். ஆனால் அப்படி நிறைவேற்றுகிறபோது தமிழ் மக்களு டைய உள்ளத்திலே பதிய வைக்க வேண்டிய எண்ணத்தை இலக்கிய அணியிலே உள்ளவர்கள் பகுத்தறிவு வாதம் பேசுகின்ற அருமைத் தோழர்கள் தந்தை பெரியாரை, பேரறிஞர் அண்ணாவைப் போற்றுகின்ற சிந்தனையுள்ள வர்கள் அந்த எண்ணத்தை மக்களிடத்திலே பக்குவமாகப் பரப்புகிற ஒரு ஆற்றலைப் பெறவேண்டும் என்று நான் விரும்புகிறேன். தமிழ் நமக்கு மூச்சு. அந்தத் தமிழ் மூச்சை நாம் இழக்காமல் தொடர்ந்து இயங்கிக் கொண்டிருப்பதற்குத் துணை நிற்பது அந்த மொழியினிடத்திலே இருக்கிற பற்று. அந்தப் பற்று இல்லாவிட்டால் அது தமிழ் மூச்சாக இருக் காது. தமிழ் மூச்சிலே வேறு பல மூச்சு கலக்கும். திரைப்படக் கொட்டகையிலே கூட்டமாக இருக்கிறபொழுது எவனவன் மூச்சோ எவனவனுக்கோ கலப்பதைப் போல கற்புக்கரசி மூச்சிலே கூட அங்கேயுள்ள மிக இழிந்த நோக்குடையவனுடைய மூச்சுக் கலக்கக் கூடிய அளவிற்கு நெருங்கி உட்கார வேண்டிய நிலைமை ஏற்படு வதைப் போல தமிழனுடைய தமிழ்ப்பற்றோடு கூடிய மூச்சிலே பிறமொழி ஆதிக்க மூச்சுக் கலந்து விடுகிற நிலை மையைக் காணுகிற போதெல்லாம் தமிழர்கள் தமிழனுடைய மூச்சைப் பாதுகாக்கிற அந்த உணர்வைக் பாதுகாக்கிற உறுதியான எண்ணத்தை மக்களிடத்திலே வேண்டும். வளர்க்க ஒரு இயக்கம் - அரசியல் இயக்கம் வெற்றி பெறலாம்; தோற்கலாம். அதுமிகச் சாதாரணம். நடமாடுகிறவனே சில நேரத்திலே தடுக்கி விழலாம்; விழுவது சாதாரணம் எழுந்து நடக்க முயற்சிப்பது மிக முக்கியமானது.
பக்கம்:கலைஞரும் கவிதையும் 1981.pdf/38
தோற்றம்