உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கலைஞரும் கவிதையும் 1981.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32 தமிழ்ப்பகை குறித்து எச்சரிக்கை உணர்வு தேவை. அதைப்போல ஒருஅரசியல் கட்சி தோல்வி அடையலாம்; ஆட்சியை இழக்கலாம். அனால் தமிழ் மக்கள் தங்களுடைய தன்மானத்தை தாய்மொழிப்பற்றை அந்தத் தாய் மொழியைப் பாதுகாக்கின்ற கடமை உணர்வை - தாய் மொழிக்குப் பகையாக இருக்கிறவர்களைப்பற்றிய எச்சரிக்கை உணர்வை என்றைக்கும் இழந்துவிடக் கூடாது. அதை இழக்காமல் இருக்க வேண்டுமானால் அந்த அந்த உணர்வை நீங்கள்தான் அவர்களிடத்திலே உருவாக்க வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன். இந்த நாட்டிலே படித்தவர்கள் சிலபேர் தங்களுடைய கடமையைப் பலகாலம் செய்ததில்லை. படித்தவர்களிலே பலர் - அந்தப் படித்தமக்கள் பாமர மக்களிடத்திலே கலந்து பழகி அவர்களுக்காக எண்ணிப் பார்க்கிற ஒரு பயிற்சியைப் பெறாத காரணத்தால் அவர்களுக்காகத் தொண்டாற்ற வில்லை. நல்லெண்ணம் படைத்தவர்கள் இருந்தார்கள். நல்ல நோக்கத்தைச் சொன்னவர்கள் இருக்கிறார்கள். ஏழைகளுக்காக எண்ணிப் பார்த்தவர்கள் இருக்கிறார்கள்! 'கல்லார்க்கும் கற்றார்க்கும் களிப்பருளும் களிப்பே' பாடிய பக்தன் முறையிலே கல்லாத மக்களுக்காகவும் கசிந்து உருகியவர்கள் இருக்கிறார்கள்; ஆனால் அந்த மக்களை வாழ வைப்பதற்காகத் திட்டம் தீட்டிச் செயலாற்றியவர்கள் அதற்காகப் பாடுபட்டவர்கள் பலபேர் இல்லை. என்று மேலும் படித்தவன் தன்னலத்தைப் பாதுகாக்கிற அவசியத்திற்கு ஆளாகிற ஒரு சூழ்நிலைக்கு இரையாகி விடுகிறான். எனவே படித்தவர்களாலே கிடைக்காத அந்தப்பலன்கூட இன்றைய பாமர மக்களிடத்திலே போய்ச் சேர்ந்தால் தவிர இந்த நாடு வாழாது என்பதை எண்ணிப்பார்க்கிற