தன்மானத் தமிழர்களே! தமிழியக்கத் தோழர்களே !! மேற்கு முகவை மாவட்ட இலக்கிய அணியின் ரண்டாவது சாதனைதான் 'கலைஞரும் கவிதையும்'! 'கலைஞர் கவிதைகள் திறனாய்வு' நூலை வெளியிட்டு, நம் இனமானப் பேராசிரியர் அவர்கள் ஆற்றிய சிறப்புரைதான் இச்சிறுநூலின் அடக்கம் ! ஒருவருடைய பேச்சைக் காசு கொடுத்துக் கேட்கவைத்த இயக்கம் - திராவிடர் இயக்கம் ! இயக்கக் கருத்துக்களையும், இனவெழுச்சிப் பேருரைகளையும், இலக்கியச் சிதறல்களையும் சின்னச்சின்ன நூற்களாக உலவவிட்ட பெருமையும் இதற்கு உண்டு !! அப் பெருமைக்குப் பெருமை சேர்ப்பதுதான் இந்நூல். அனைவரும் படித்து உணரவேண்டிய அருமையான திறனாய்வுரை. அருவியென கருத்துக்கள் விழுந்தாலும் ஆற்றொழுக்கான நடை. பேராசிரியர் அவர்களின் இப்பேச்சு ஏற்கனவே 'முரசொலி' (மதுரைப் பதிப்பு : 18-11-81) இதழில் வெளிவந்துள்ளது என்றாலும், அவராலே திருத்தம் செய்யப் பட்டு நூல்வடிவம் பெறுகிறது. இதை நூல்வடிவில் உருவாக்க ஒப்புதல் அளித்த பேராசிரியர் அவர்கட்கு நெஞ்சார்ந்த நன்றி கூறி, அன்னாரின் அறுபதாவது பிறந்தநாள் பரிசாக இத்தமிழ் உலகிற்குப் படைத்து மகிழ்கின்றோம். வாழ்க பேராசிரியர் !! அன்புள்ள, ம.மு.காசாமைதீன்
பக்கம்:கலைஞரும் கவிதையும் 1981.pdf/4
தோற்றம்