உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கலைஞரும் கவிதையும் 1981.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

33 இளைஞர்களும் புலவர்களும் ஆர்வமுள்ள தோழர்களும் அந்தப் பொதுமக்களிடத்திலே தமிழ்ப்பற்று வளர என்ன வழி? தமிழ்ச் சிந்தனையை ஓங்கச் செய்ய என்ன வழி? தமிழினத்தைப் பாதுகாக்க என்ன வழி? இலங்கைத் தமிழர் களுக்கு ஏற்பட்ட இழிவானாலும் கொடுமையானாலும், மலேசியா, சிங்கப்பூர் போன்ற பலவெளி நாடுகளில் வாழும் தமிழர்க்கு ஏற்பட்டு வரும் தொல்லைகளானாலும் அப்படிப்பட்ட நிலைமைகளை மாற்றியமைக்கக் கூடிய ஒரு ஆற்றல் ஏற்படவேண்டுமானால் தமிழகத்திலே தமிழன் தனனைத்தானே ஆட்சி செய்து கொள்ளக் கூடிய ஆற்றல் மிக்கவனாக இருக்கிறான் என்ற நிலையை உருவாக்கித்தீர வேண்டும். - சரி கலைஞர் கருணாநிதி ஆட்சி பீடத்தில் அமர வேண்டு மென்றோ அல்லது எங்களைப் போன்றவர்கள் எப்படி யாவது அமைச்சராகி விடவேண்டுமென்றோ இந்தக் கருத்தை நான் எடுத்துச் சொல்லவில்லை. தமிழ் மக்களுக்கு வழிகாட்டுகிறவன், "தமிழாய்ந்த தமிழ் மகன்தான் தமிழகத்தின் முதலமைச்சாய் வருதல் வேண்டும்' என்று புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் அவாவோடு எடுத்துச் சொன்னாரே, அந்த அவாவினை நிறைவேற்றுகிற அளவுக்குத் தமிழ் மக்களிடத்திலே அந்தத் தமிழ் ஆர்வம், தமிழன் என்ற உணர்வு, தமிழனுக்கு எங்கே கேடு விளை விக்கப்பட்டாலும் அந்தக் கேட்டினைத்துன்பத்தைக் கேட்கிற போது, அவர்கட்கு ஆதரவு காட்டித் துணைநிற்கும் ஒரு உணர்வு நம்மிடத்திலே வளர்ந்தாக வேண்டும். ஏனோதானோ தமிழ்மக்களுடைய இயல்பானபோக்கு என்றிருப்பது ; இயல்பானபோக்கு இயற்கையிலே நடப்பது நடக்கட்டும் என்று காத்திருப்பது ; இயல்பான போக்கு யாருடைய தவறான நடவடிக்கைகளைப் பற்றியும் கவலைப் படாமலிருப்பது; இயல்பான போக்கு ஊரே கொள்ளை போனாலும் உரத்த குரலில் யாரிடத்திலும் சொல்லாம