34 லிருப்பது; இயல்பானபோக்கு என்முதுகில் ஏறியிருந்தாலும் கூட அடுத்தவனுக்குத் தெரியாமல் ஏறியிருக்கட்டும் என் றிருப்பது! தமிழனைப் போல ஒரு ஏமாளி தமிழனைப் போல ஒரு பைத்தியக்காரன் தமிழனைப்போல தன் இனப் பெருமையைக் கருதாதவன் -தமிழனைப்போல உலகத்திலே, எங்கே போய் நின்றாலும் அவன் யார் என்று பிறர் அடை யாளம் கண்டு கொள்ளக் காரணமாக இல்லாதவன் வேறு யாரும் இல்லை. தமிழனின் துயர நிலை அந்த ஒரு சூழ்நிலைக்கும் மனப்பான்மைக்கும் காரணம் உண்டு. உலகத்திலே தமிழனைப் போன்று ஒரு பழமையான இனத்தைச் சார்ந்தவன் வேறு யாரும் இல்லை. தமிழ் மொழியைப் போல் மிகத் தொன்மையான காலத்திலே தோன்றிய இன்னொரு மொழி இல்லை. தமிழனைப் போல் பரந்த நோக்கங்களுக் கெல்லாம் இடமாக வாழ்ந்த இன்னொரு சமுதாயம் இல்லை. தமிழனைப்போல் பல்வேறு அலைகளிலெல்லாம் சிக்கிச் சிக்கி அதற்குப் பின்னர் எப்படியோ கரையேறி நிற்கிறவன் வேறு யாரும் இல்லை. உலகத்திலே உள்ள எல்லா விதமான நாட்டு மக்களோடும் தொடர்புடையவனாக வாழ்ந்தவன் என்ற பெருமைக்குரிய தமிழ ன் உலகத்திலேயுள்ள பல்வேறு நாடுகளுடைய கலாச்சாரப் பண்பாட்டுத் தொடர்புகளுக்கு ஆளானவனாக ஆகித் தீர்ந்தவன். வயதான ஒரு கிழவன் 150 வயதிலே உள்ள ஒரு வயதான மனிதன், அதுவும் ஒரு பக்தனாக இருப்பானே யானால் அவன் எண்ணங்களிலே எதுபற்றியும் கவலைப் படாமல் நிலைத்துவிட்ட ஒரு மோன நிலையிலே இருப்பதைப் போல தமிழன் மெல்ல மெல்ல அந்த நிலைக்கு ஆளாகி விட்டான். இளமைக்கும் தமிழனுக்கும் வயதிலே தொடர்பு ஏற்படுவதைத்தவிர இன உணர்ச்சியிலே தொடர்பு ஏற்படுவ தில்லை. 1 தான்
பக்கம்:கலைஞரும் கவிதையும் 1981.pdf/41
தோற்றம்