36 6 நாட்டினுடைய மிகப்பெரிய பாதிரி ஆர்ச்பிஷப் ஆப் கான்டர்பரி அவர்கள் அவரை வரவேற்றார். அப்படி வரவேற்கிறபோது சீஜட்பாக் பாதிரியார் கிழக்கு ஆசிய நாடுகளிலும், இந்தியாவிலும் தங்கியிருந்து சமயப்பணி ஆற்றியதற்காகப் போற்றிப் புகழ்ந்து, அவ்வளவு பெரிய அரும்பணியாற்றிய பெரியவரை நான் வரவேற்பதற்கு ஏற்ற உயர்ந்த மொழி இலத்தீன் மொழி. அந்த இலத்தீன் மொழி யிலே நான் சீஜட்பாக் அவர்களைப் பாராட்டி இந்தவாழ்த் திதழைப்படிக்கிறேன் என்று முதலாம் ஜார்ஜ் முன்னிலையில் அவர் படித்து வழங்கினார். இலத்தீன் மொழியிலே வழங்கப் பட்ட அந்த வரவேற்பைப் பெற்றுக் கொண்டு 'சீஜட்பாக் நன்றி கூற எழுகிறார் ; தொடங்குகிறார், "என்னை ஒரு உயர்ந்த மொழியிலே வரவேற்றால்தான் அது எனக்குப் பெருமை என்று ஆர்ச் பிஷப் கான்டர்பரி அவர்கள் இலத்தீன் மொழியிலே வரவேற்புரை வழங்கினார்கள். என்னிடத்திலே வைத்திருக்கிற பேரன்பிற்கும் பேரன்பிற்கும் என்றும் நன்றியுடையவன்" என்று சொல்லி விட்டுச் சொல் கிறார்; "ஒரு உயர்ந்த மொழியிலே என்னை வரவேற்பது எனக்குத் தருகின்ற ஒரு பெருமை என்று கருதி கான்டர்பரி பாதிரியார் இப்படி வழங்கியிருக்கிறபோது எனக்கு இவ்வளவு பெரிய வரவேற்புத் தந்த உங்களுக்கு நானும் உயர்ந்த மொழியிலேதான் பதிலளிக்கவேண்டும். என் னு டைய நன்றியதலை ஒரு உயர்ந்த மொழியிலே சொல்வதை நான் உங்களுக்குச் செய்கிற பெருமையாகக் கருகிறேன் - எனக்கும் பெருமையாகக் கருதுகிறேன். உலகம் தோன்றிய நாள் முதல் உலகத்திலே இறைவனாலே படைக்கப்பட்ட மொழி களிலேயெல்லாம் மிக உயர்ந்த மொழி என்று நான் அறிந்து வந்திருக்கின்ற 'தமிழ் மொழியில் உங்களுக்கெல்லாம் நன்றி தெரிவிக்கிறேன்" என்றார். அந்த சீஜட்பாக் பாதிரி யார் இங்கு முப்பதாண்டுக் காலம் வாழ்ந்த உணர்ச்சியோடு இங்கிலாந்து நாட்டிலும் தமிழ் மொழியினுடைய பெருமையை பெருமதிப்பிற்கும் தான்
பக்கம்:கலைஞரும் கவிதையும் 1981.pdf/43
தோற்றம்