கலைஞரும் கவிதையும்
மேற்கு முகவை மாவட்ட இலக்கிய அணியின் சார்பாக சீரிய முயற்சியை மேற்கொண்டு, கலைஞர் அவர் களுடைய கவிதைகளை யெல்லாம் ஒன்பது புலவர்கள் பல்வேறு கோணத்திலே ஆராய்ந்து, அந்தக் கவிதைகளிலே காணப்படுகின்ற அழகான கருத்துக்களையும் அதை எடுத்துச் சொல்லுகிற பேராற்றலையும் அதற்கிடையிலே காணப் படுகின்ற நயத்தையும் சொல்லழகையும் - இவற்றை யெல்லாம் முறைப்படுத்தி விரிவாக விளக்கியுள்ள கட்டுரை நூலை இன்றைய தினம் வெளியிடுகின்ற ஒரு பெருமையை எனக்கு வழங்கியுள்ளீர்கள். அப்படி வழங்கிய மேற்கு முகவை மாவட்ட இலக்கிய அணியைச் சார்ந்த நண்பர்களுக்கெல்லாம் என்னுடைய உளமார்ந்த நன்றியையும், மகிழ்ச்சியையும் நான் தெரிவித்துக் கொள்ளக் கடமைப்பட்டிருக்கின்றேன்.
இந்த இனிய விழா இங்கே நடைபெறுவதற்குக் காரணமாக இதற்கான சிறந்த பணிகளையெல்லாம் பொறுப் பேற்று நிறைவேற்றிய திரு காசாமைதீன் அவர்களுக்கும், திரு கண்ணையன் அவர்களுக்கும் என்னுடைய வாழ்த்துக்களை நான் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். இலக்கிய அணியின் சார்பில் இங்கே உரை நிகழ்த்திய நண்பர்கள் கலைஞருடைய கவிதை ஆற்றலைப் பற்றி, அந்த ஆற்றல் பிறப்பதற்கான காரணத்தைப் பற்றி எடுத்துச் சொன்னார்கள்.
கலைஞரை நான் தமிழனாகக் காண்கிறேன்.
என்னைப் பொறுத்தவரையில் கலைஞரை நான் ஒரு கவிஞன் என்று காண்பதில்லை ! கலைஞரை ஒரு கதை