2 ஆசிரியர் என்றும் நான் காண்பதில்லை ! கலைஞரை ஒரு அரசியல்வாதி என்றும் நான் காண்பதில்லை ! கலைஞரை ஒரு மிகச் மிகச் சிறந்த எழுத்தாளர் என்றும் நான் காண்பதில்லை! கலைஞரை ஒரு பெரிய பேச்சாளர் என்றும் நான் காண்ப தில்லை ; ஆனால் நான் கலைஞரை ஒரு தமிழன் என்று
காண்கின்றவன். (பலத்த கை தட்டல்) ஒரு தமிழன் என்று காண்பது மட்டுமல்லாமல் நல்ல தமிழன் என்று உணர்ந்தவன்; நல்ல தமிழன் என்பது மட்டு மல்லாமல் அறிஞர் அண்ணா அவர்களுடைய அருமைத்தம்பி என்ற தகுதியுடையவர் (கைதட்டல் என்று கருதுபவன்; அறிஞர் அண்ணாவின் தம்பியாக இருக்க வேண்டுமானால் அதற்குச் சில தகுதிகள் வேண்டும் என்று எனக்குத் தெரியும் என்ற காரணத்தால் அந்தத் தகுதிகளைப் பெற்றவர்கள் சிலர் அதை இழந்துவிட்ட காரணத்தால் அதை இன்னும் இழக்காதவர் என்று கருதுபவன். (கைதட்டல்) இழக்காதது மட்டுமல்ல, வாழ்வதற்கு அடையாளம் அதை வளர்ப்பது என்ற காரணத்தால், அதை வளர்க்கிற ஆற்றல் பெற்றவர் என்று நான் கருதுபவன், இன்னும் சொல்லப்போனால் அவரைப் போல் இன்னொருவர் இல்லாத தகுதியையும் பெற்றவர் என்ற சிறப்பை உணர்ந்தவன். (கைதட்டல்) எனவே அவரைப் பற்றி என்னுடைய அருமை நண்பர்கள், புலவர்கள், கவிஞர்களெல்லாம் 'கலைஞர் ஒரு கவிஞர்' என்ற கோணத்திலே ஆராய்ச்சி நடத்தினாலும் அது ஒரு கோணத்திலே நடத்துகிற ஆராய்ச்சியே தவிர முழுக் கோணத்திலே நடத்துகிற ஆராய்ச்சி அல்ல என்பதையும், அவர் எட்டுக்கோணத்திலேயுமே வளைந்து வருகிறவர். அதிலே ஒரு கோணம் இந்தக் கோணம் என்பதை நான் அவர்களுக்கு நினைவூட்ட விரும்புகிறேன். (மகிழ்ச்சி-ஆரவாரம் ஆனால் அந்த ஒரு கோணத்திற்குள்ளே மத்தாப்பு சிறிய குச்சியாக இருந்தாலும் அது எரிகிற போது பல்வேறு