பக்கம்:கலைஞரைப் பற்றி உவமைக் கவிஞர்.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

☐13

அதில் வள்ளுவர் கோட்டம் முன்நின்று பேசியுள்ளேன். அதில் கலைஞர் பற்றியும், வள்ளுவர் கோட்டம் பற்றியும் விளக்கி யுள்ளேன். இதை நீங்கள் தொலைக்காட்சியில் பார்க்கலாம்.

நேர் வகிடு

கலைஞர் எதையும் புதுமையாகச் செய்யக் கூடியவர். தலைவகிடு பெண்களைப் போல நேர் வகிடு எடுத்திருப்பார். இவர் யாரைப் பார்த்துப் பின்பற்றினாரோ... தெரியாது! ஆனால் இவரைப் பார்த்தே இவரது நண்பர்களும் கலைஞர்களும் நேர்வகிடு எடுத்தார்கள். தமிழன்பன், ஏ.கே. வில்வம், அரங்கண்ணல் இன்னும் சிலர் அவரைப் பார்த்து நேர்வகிடு எடுத்தவர்கள். அவரையும் அவரது பேச்சையும் எழுத்தையும் பின்பற்ற, தொடக்க காலத்திலிருந்தே பலர் இருந்தனர்.

இன்றைக்குக் குடியரசுத் தலைவராக இருக்கின்ற ஆர். வெங்கட்ராமன், பட்டுக்கோட்டை குமாரவேல், ஓவியர் ரசாக், முன்னாள் அமைச்சர் எஸ்.டி. சோமசுந்தரம், புகழ் பெற்ற ஒட்டப்பந்தய வீரர் மயில் இராசகோபாலன் ஆகியோர் பயின்ற இராசா மடம் நடுநிலைப் பள்ளியில் நானும் பயின்றேன்.

இரண்டாம் உலகப் போர் தொடங்கிய அந்நேரத்தில் ஹிட்லரை உலகமே புகழ்ந்து பேசிக் கொண்டிருந்தது. அந்த ஹிட்லர் போல நானும் வலப்புறம் வகிடு எடுத்தவன். ஹிட்லரை நான் பின்பற்றினேன். என்னைப் பின்பற்றியவர்கள் யாரும் இல்லை. ஆனால் நேர்வகிடு எடுத்த கலைஞர் அவர்களைப் பின்பற்றியவர்கள் உள்ளனர்.

காலைத் தொடும் கூந்தலும் கலைஞரின் மேல்துண்டும்

தோளில் துண்டு போடுவதில்கூடப் புதுமையைச் செய்தவர் கலைஞர் அவர்கள். அண்ணா, நாவலர், பேராசிரியர் போன்றவர்களிடமிருந்து மாறுபட்டு, மிக நீண்ட துண்டு