பக்கம்:கலைஞரைப் பற்றி உவமைக் கவிஞர்.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

凹 15

தொடர்ந்து நடத்தும் இதழாசிரியர் இதழ் நடத்துவதிலும் எனது நண்பர் கலைஞர் அவர்கள் முதல்வராக விளங்குகிறார். 1925-இல் பெரியார் அவர்கள் 'குடியரசு' இதழ் தொடங்கினார். அந்த இதழ் தொடர்ந்து வராமல் இடையிலே நின்றது.

அண்ணா-திராவிடநாடு நாவலர்-மன்றம்-தில்லைவில்லாளன்-தம்பி அரங்கண்ணல்-அறப்போர்-காஞ்சி மணிமொழியார்-போர்வாள் சி.பி.சிற்றரசு-தீப்பொறி ஆசைத்தம்பி-தனி அரசு கே.ஏ. மதியழகன்-தென்னகம் நாஞ்சிலார்-விந்தியம் என்.வி. நடராசன்-திராவிடன் பி.எஸ். இளங்கோ-மாலை மணி

மேற்கூறப்பட்டவர்களால் நடத்தப்பட்ட இத்தகைய ஏடுகள் எல்லாம் தொடர்ந்து வந்ததாக வரலாறில்லை.

நானும் கூட உலகிலேயே இல்லாத அளிவிற்குக் கவிதை யிலேயே காவியம் என்ற ஏட்டைத் தொடங்கினேன்.அதுவும் இடையிலேயே நின்றுபோனது. ஆனால்,கலைஞர் அவர்களோ 'முரசொலி ஏட்டைக் கையெழுத்து இதழாகத் தொடங்கி,வார இதழாக்கி-நாளேடாக்கி இன்றளவும் தொடர்ந்து நடத்தி வருகிறார்.இந்த வகையில் இதழ் நடத்துவதில் இவர் வெற்றி பெற்றவராக விளங்குகிறார்.

நெஞ்சுக்கு நீதி

வடநாட்டுத் தலைவர்களாகிய காந்தி,நேரு,ஜெயப்