பக்கம்:கலைஞரைப் பற்றி உவமைக் கவிஞர்.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

16☐

பிரகாசர் போன்றோர். அவரவர் வாழ்க்கை வரலாற்றை அவரவர்களே எழுதியிருக்கிறார்கள். தென்னாட்டு அரசியல் தலைவர்களை எடுத்துக் கொண்டால், தந்தை பெரியார் அவர்களின் வாழ்க்கை வரலாற்றை-எனக்கும் பேராசிரியர் இலக்குவனார் அவர்களுக்கும் ஆசிரியராக இருந்த சாமி சிதம்பரனார் அவர்கள் தான் முதன் முதலில், "தமிழர் தலைவர்" என்ற தலைப்பிட்டு எழுதினாரே அன்றி, பெரியாரே எழுதவில்லை. அவ்வாறே அறிஞர் அண்ணா அவர்களின் வாழ்க்கை வரலாற்றை அ. மறைமலையானும், காமராசர் அவர்களின் வாழ்க்கை வரலாற்றை மு. நமச்சிவாயமும், பக்தவத்சலம் அவர்களின் வாழ்க்கை வரலாற்றை காஞ்சி அமிழ்தனும் எழுதியிருக்கிறார்களே தவிர, அவர்களாக எழுதவில்லை. ஆனால், தன்னுடைய வரலாற்றை "நெஞ்சுக்கு நீதி" என்ற தலைப்பில் தானே எழுதியிருக்கக் கூடியவராக கலைஞர் தான் விளங்குகிறார். தன் வரலாற்றைத் தானே எழுதுகிற நிலை வடக்கே உள்ள அரசியல் தலைவர்களிடம் இருந்தது. தெற்கே, இவரே அத்தகைய நிலைக்கு எடுத்துக்காட்டாகிறார். அரசியல் தலைவர்கள் தன் வரலாற்றைத் தானே எழுத வேண்டும் என்ற தன்னம்பிக்கையை இவர் ஊட்டியிருக்கிறார்.

நினைவாற்றல்

எனது நண்பர் கலைஞர் அவர்கள் 13.9.1944இல் சி.எஸ். ஜெயராமன் அவர்களின் தங்கை பத்மாவதியைத் திருமணம் செய்தபோது நானவர்க்கு வழங்கிய திருமண வாழ்த்தில், பாடல் பெற்ற தலமாகிய, அவர் பிறந்த திருக்குவளையைக் குறித்து,

"உருக்குலையா மங்கை ஒளிமுகத்தை முத்தமிடக் கருக்கலிலே கண்விழிக்கும் திருக்குவளை"