பக்கம்:கலைஞரைப் பற்றி உவமைக் கவிஞர்.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

18口

சாதனைத் தமிழர்

மலேசியத் தலைநகர் கோலாம்பூரில் ஆறாவது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு 1987-ஆம் ஆண்டு நவம்பர்த் திங்கள் 15 முதல் 19 வரை சிறப்புற நடைபெற்றபோது,அம் மாநாட்டில் கலைஞர் அவர்களும் கலந்து கொண்டு சிறப்புரையாற்றிச் சிறப்பித்தார். இங்கே சாதனைத் தமிழராகத் திகழுகின்ற இவர், அங்கே,மலேசிய மந்திரி டத்தோ சாமிவேலு அவர்களுக்குச் சாதனைத் தமிழர் என்று பட்டம் கொடுத்தார். அந்த விழாவில் கலைஞரைப் பெருமைப் படுத்தினர். இது தமிழர்களுக்குக் கிடைத்த பெருமை யானாலும் இதை,கட்சி வேறுபாடு இல்லாமல் எண்ணிப் பார்த்துப் பூரிப்பு அடைய வேண்டும்.

எழுத்துச் சூரியன் உலகத்திலேயே மிக வேகமாகச் செயல்படுகிற மிச் சிலரில் ஒருவராக கலைஞர் விளங்குகிறார். வடநாட்டில் இருந்து ஏழு பேரை இங்கு இழுத்துவிட்டார். இது பெரிய செய்தியாகும். காமராசர் இங்கிருந்து வடநாட்டுக்குப் போனார். ஆனால் வடநாட்டுத் தலைவர்களை இவர் இழுத்து உள்ளார். இந்தியாவையே இழுக்கும் ஆற்றல் இருக்கிறது. மிக சாதுரியமான அறிவாளி இவர். இப்படி அவர் அனைத்துத் துறைகளிலும் சிறந்தவராக விளங்குகிறார்.

இப்படிப்பட்ட தலைவரின் வாழ்க்கை வரலாற்றை வட மொழியில் எழுத வேண்டும். வேறு மாநில மொழிகளில் எழுத வேண்டும். மேலும் அவரது வாழ்க்கை வரலாற்றைத் திரைப் படமாகத் தயாரிக்க வேண்டும். இதற்கான முயற்சியில் இங்குள்ளவர்கள் ஈடுபட வேண்டும்.