பக்கம்:கலைஞரைப் பற்றி உவமைக் கவிஞர்.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

凹23

தடிகொண்டான் மயான மண்ணில் தார்வேந்தன் ஒருவன்; சாட்டை அடிகொண்டான குடுமிக் கோயில்ஆண்டவன் ஒருவன்; மாற்றார் முடிகொண்டான் சோழன்; நாட்டின்

முதல்வரே! தாங்கள் கல்லக் குடிக்கொண்டான் என்னும் பேரைக்கொண்டிங்கே விளக்கு கின்றீர்!

சதித்தேர்தல் நடத்தும் கட்சித் தலைமையை வீழ்த்தி வெல்லும் பொதுத்தேர்தல் புலியே! ரோமா புரிசென்ற முத்தே! செந்நெல் விதைத்தேர்தல் தேவை; வேங்கை விழியைப் போல் தெளிவு கொண்ட மதுத்தேர்தல்வேண்டாம் என்று மறுக்கின்ற தலைவர் நீங்கள்!

கற்றவர் மதிக்க,ஒலைக் கவிஞர்கள் துதிக்க,நாட்டில் மற்றவர் வியக்க,வேறு மாநிலம்அழைக்க,உம்மைப் பெற்றவர் உவக்க,உங்கள் பெரும்பெயர் சிறக்க,மேலும் உற்றவர் களிக்க வாழும் உதயமே! வருக! வாழ்க!!

(1.3.1970 சுரதா கவிதை இதழ்)