பக்கம்:கலைஞரைப் பற்றி உவமைக் கவிஞர்.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

口5



கலைஞரைப் பற்றி

கவிஞர் சுரதா


வடஆற்காடு மாவட்ட தி.மு.க. இலக்கிய அணி சார்பில் வேலூர் அண்ணா கலையரங்கில், எனது நண்பரும் என்னை விட நான்கு வயது இளையவருமான கலைஞரின் பொது வாழ்வுப் பொன்விழா சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. தமிழகத்தில் இப்படி எத்தனைத் தலைவர்களுக்கு விழா வெடுக்கப்பட்டுள்ளது என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும். அப்படிப் பார்க்கும்போது பொது வாழ்வுக்குப் பொன்விழா எடுக்கும் ஒரே தலைவராக கலைஞர்தான் விளங்குகிறார். பொதுவாக அறுபது வயது முடியும்போது மணிவிழாதான் எடுப்பது வழக்கம். கலைஞருக்கு அறுபத்து நான்கு வயது ஆகிறது. அவரது பொது வாழ்வுக்கு பொன் விழா எடுக்கிறார்கள் என்றால், அவர் பதினான்கு வயதில் அரசியலில் ஈடுபட்டுள்ளார். ஒரியக்கத்தில் தட்டுத் தடுமாறாமல் ஐம்பது ஆண்டு காலமாக இருந்து வருகிறார். இப்படிப்பட்ட தமிழனுக்கு விழா எடுப்பது சிறப்பாகும்.

பொதுவாக நான் அண்மைக் காலங்களில் கலந்து கொள்கிற கூட்டங்களில் எல்லாம் நிகழ்ச்சி நடைபெறும்