________________
கலைஞர் மேல் காதல் கொண்டேன் தமிழ்க்குடிமகன் (5.8.1979 என் வாழ்வின் பொன்னான நாள். தலைவர் கலைஞர் அவர்கள் 1969, 1972, 1974 ஆகிய ஆண்டுகளில் முதலமைச்சராக எம் கல்லூரிக்கு வந்துள் ளார். அப்போதெல்லாம் யாதவர் கல்லூரி ஆசிரியர்கள் சார்பில் மாலை அணிவித்ததோடு சரி. நேருக்கு நேர் பேசவும் இல்லை. அறிமுகப்படுத்திக் கொள்ளவும் இல்லை. 1977-இல் தலைவர் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவராகி விட்டார். 1979-இல் நான் யாதவர் கல்லூரி முதல்வரானேன். இந்த நிலையில் கல்லூரிப் பேரவை மற்றும் அனைத்து மன்றங்களின் தொடக்கவிழாவிற் குத் தலைவர் கலைஞர் அவர்களை அழைத்திருந் தோம்.5.8.79-இல் அந்த விழா நடைபெற்றபோது முதல்வர் எனும் முறையில் அவர் அருகில் நின்று ஒரு வரவேற்புரை நல்கினேன். வாழ்நாளில் அவரை நேருக்கு நேர் சந்திக்கும் முதல் வாய்ப்பு அது. வரவேற் புரை கேட்டு மகிழ்ந்துபோன கலைஞர் தான் பேசுகிற போது 'தமிழ்க்குடிமகன்' எனும் தலைப்பினை அங் கேயே தேர்ந்தெடுத்து உரையாற்றினார். ஆம்! முதல் சந்திப்பிலேயே 'தமிழ்க்குடிமகன்' தலைப்பாகத் தேர்ந் தெடுக்கப்பட்டான். அந்த உரையைத் தான் இப்போது படிக்கிறீர்கள்.)