உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கலைஞர் மேல் காதல் கொண்டேன் 1992.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

முனைவர் மு.தமிழ்க்குடிமகன் 10 இந்தக் கல்லூரியின் அனைத்து மன்றங்களின் தொடக்க விழா என்ற பெயரில் இந்த மாலை நிகழ்ச்சியில் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மட்டற்ற மகிழ்ச்சி அடை கிறேன். பத்தாண்டுகளுக்கு முன்பு இந்தப் பரந்த வெளியில் இந்தக் கல்லூரி துவங்க வேண்டும் என்கின்ற தணியாத ஆசையோடு கல்நாட்டு விழா நடத்திவிட்டு அதன் பின் இங்கே எழுந்துள்ள கட்டிடங்களைக் காணும் வாய்ப்பினைப் பெறும் அளவிற்கு இந்தக் கல்லூரி சிறப்புற நடைபெறுகிறது என்ற செய்தியினை, தொடர்ந்து கேட்டு, நேரிலே காண வேண்டும் என்கிற ஆசையும் நிறைவு பெறுகின்ற அளவிற்கு இந்த விழாவிலே நான் பங்கு பெறுகின்ற வாய்ப்பை அடைந்திருக்கின்றேன். அனைத்து மன்றங்களின் தொடக்க விழாவில் மாணவர் பேரவைத் தலைவருக்கான உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சியும் இங்கே நடைபெற்றிருக்கிறது. இன்றைக்கு மாணவர் தலைவர் எடுத்துக் கொண்டிருக் கிற உறுதிமொழி அந்தப் பதவி எத்தனை ஆண்டு காலத் திற்கு, எத்துணை மாதங்களுக்கு என்று நிர்ணயிக்கப் பட்டி ருக்கின்றதோ அந்தக் கால கட்டம் வரையில் அவர் இந்தப் பொறுப்பை ஏற்றுப் பணியாற்றுவார் என்ற உறுதியை நமக் குத் தெரிவிக்கின்றது. உ ஆனால் இன்றைக்கு அனைத்திந்திய அரங்கத்தில் நாள் தோறும் உறுதிமொழிகள் எடுத்துக் கொள்ளப்படுகின்றன - முதல்வர் முன்னிலையில் அல்ல. இந்தியக் குடியரசுத் தலை வர் முன்னிலையில் எடுத்துக் கொள்ளப்படுகின்றன. எடுக் கப்பட்டவர்கள் எவ்வளவு நாளுக்கு உறுதிப்பாட்டோடு இருப்பார்கள் என்ற ஐயப்பாட்டோடு அனைத்து இந்தியா வில் இருக்கின்ற மக்கள் விழிகளை அகல விரித்து இந்திய