________________
11 கலைஞர் மேல் காதல் கொண்டேன் நகரத்தின் தலைநகரை உற்று நோக்கியவாறு இருக்கின்ற சூழ்நிலையில் தான் நான் உங்களை இந்தக் கல்லூரியில் சந்திக்கின்றேன். நம்முடைய கல்லூரி முதல்வர் தமிழ்க்குடிமகன் அவர் கள் என்னைப் பற்றியும், நான் இந்தக் கல்லூரிக்கு ஆற்றிய பணிகள் பற்றியும் எடுத்துரைத்ததைத் தொடர்ந்து மாணவர் பேரவைத் தலைவர் ராஜசேகரனும், ஆட்சிக் குழுத்தலைவர் கோவிந்தராசனும், தாளாளர் ரங்கசாமியும் பல்வேறு கருத் துக்களை எடுத்துச் சொல்லியிருக்கிறார்கள். உ மாணவர் பேரவைத் தலைவர் உரையாற்றியபோது யாத வப் பெருங்குடி மக்களின் தலைவர் கண்ணனென்றும், அந்தக் கண்ணன் ஏழ்மையிலே துவண்டு கொண்டிருந்த குசேலனுக்குச் செல்வத்தை வாரி வழங்கி மாளிகைக்கு அதிபதியாக ஆக்கினான் என்றும் ஒரு உதாரணத்தை எடுத்துச் சொன்னார். குசேலருக்கு 27 குழந்தைகள். குசேலருக்கு அளப்பரிய செல்வத்தையும் அளித்த கண்ணன் குசேலருக்கு எந்த நிபந்தனையும் போடவில்லை. நீ பணக்காரனாகிவிட்ட காரணத்தினால் உன் பிள்ளைகள் 27 பேருக்கும் படிப்பதற் கான வாய்ப்புகள் கிடையாது என்று அவன் தடுத்துவிட வில்லை. அப்படித் தடுத்திருந்தால் குசேலருக்கு இவ்வளவு செல்வம் மிகுந்தவராக ஆகிவிட்டார் ஆகவே அவருடைய பிள்ளைகள் படிக்க இயலாது -அவர்கள் எல்லாம் முன்னேறி யவர்களாக மாறிவிட்டார்கள் என்று கண்ணன் அன்றைக்குச் சொல்லி இருந்தால், குசேலர் பிள்ளைகள் 27 பேரும் கல்வி கற்றிருக்க முடியாது. இன்று அதே நிலை தமிழ்நாட்டில் ஏற்பட்டிருக்கிறது. குசேலரின் நிலையிலிருந்த பிற்படுத்தப் பட்ட சமுதாயத்திற்கு கண்ணன் அல்ல என்னுடைய அண் ணன், அவருடைய தலைவர் தந்தை பெரியார், அவருக்கும் முன்பிருந்த திராவிடர் இயக்கத்தின் பெருந்தலைவர்கள் இவர்களெல்லாம் வழங்கிய கருவூலந்தான், நிகரற்ற செல்