________________
முனைவர் மு.தமிழ்க்குடிமகன் 12 வம்தான் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம், வகுப்புரிமை என்பதாகும். அதை வழங்கிய அந்தத் தலைவர்கள் எந்த நிபந்தனை யையும், எப்படி கதையிலே வருகிற கண்ணன் குசேலருக்கு விதிக்கவில்லையோ, அதைப்போல நிபந்தனைகள் எதுவு மில்லாமல் தாழ்ந்து கிடக்கும் சமுதாயம் தலைமுறை தலை முறையாகக் கல்வியறிவற்று, ஏன், கண்ணற்று, கபோதி நிலையிலிருக்கிற சமுதாயம் தலை நிமிர்ந்து எழுந்து நடமாடவேண்டும் என்கிற ஒரே எண்ணத்தோடு அந்தக் கருவூலத்தை வழங்கினார்கள். அந்தச் செல்வம் தொடர்ந்து பல ஆட்சியாளர்களால் பாதுகாக்கப்பட்டது. பறிபோகாமல் அதைப் பாதுகாக்கப் பல ஆட்சிகள் இருந்தன. பெருந்தலைவர் காமராசர், பெரிய வர் பக்தவத்சலம், குமாரசாமிராஜா, குலக்கல்வித் திட்டம் கொண்டு வந்த ராஜாஜி அவர்களே ஆனாலும்கூட அந்தச் செல்வத்தைச் சீரழிக்க எண்ணியது இல்லை. ஆனால் இன் றைக்கு அந்தச் செல்வம் கொள்ளை போகின்ற சூழ்நிலையி லேதான் உங்கள் முன்னால், அந்தக் கொள்ளையைத் தடுக்க உங்களுடைய கரங்களும் எனக்கு உதவிட வேண்டும் என்ற கோரிக்கையோடு நான் இங்கே பேசிக் கொண்டிருக்கிறேன். தமிழ்க்குடிமகன் இங்கே நான் நீண்ட நேரம் உரையாற்ற வேண்டுமெனக் குறிப்பிட்டார். எனக்கு நிறைய நிகழ்ச்சிகள் இருப்பது உங்களுக்குத் தெரியும். நீண்ட உரைக்குத் தலைப்பு எதுவாக இருக்காலம் என்று மேடையில் இருந்தவாறு நான் யோசித்தேன். தலைப்பு "தமிழ்க்குடிமகன்” என்பதுதான். தமிழ்க்குடிமகன் பழங்காலத்தில் குறிஞ்சி, முல்லை, மரு தம், நெய்தல்,பாலை என்று ஐவகை நிலங்களைப் பிரித்துக் கொண்டு அந்த நிலங்களுக்கு ஏற்றவாறு வாழ்க்கையை அமைத்துக் கொண்டு வாழ்வு நெறியை உருவாக்கிக் கொண்டு வாழ்ந்தவன். அந்தத் தமிழ்க்குடிமகன் உலகத்திற்