________________
13 கலைஞர் மேல் காதல் கொண்டேன் குப்பண்பாடுகளைக் கற்றுத் தரும் ஆற்றல் பெற்றிருந்தான். உலகத்தோடு வாணிபத் தொடர்பு கொள்ளுமளவிற்குத் திறன் படைத்தவனாக இருந்தான். அந்தத் தமிழ்க்குடிமகன் தமிழகத்தில் விளைவித்த செல்வங்களை கிரேக்கம், யவனம் போன்ற வெளிநாடுகளுக்கு அனுப்பி வைத்து வெளிநாட் டிலே இருந்து வருகிற பொருட்களைத் தன்னுடைய நாட்டுத் துறைமுகத்தில் இறக்குமதி செய்து அவைகளைத் தமிழ் மக்களுக்குத் தருகிற வாணிப வேந்தனாக விளங்கினான். கடாரங்கொண்டான், இலங்கையை வென்றான், வர லாற்று வேந்தனாகவும் தமிழ்க்குடிமகன் திகழ்ந்தான். அப்ப டித் திகழ்ந்த தமிழ்க்குடிமகன் இடைக்காலத்திலேற்பட்ட சில அல்லல்களால், சோதனைகளால், சில குறுக்கீடுகளால் தமிழ்க்குடிமகன் என்ற பெயரையே இழந்தான். அந்தப் பெயர் யாதவர், முக்குலத்தோர், வன்னியர், முதலியார், செட்டியார், பிள்ளை என்று இப்படிப் பல பெயர்களாக மாறின. பல பெயர்களாக மாறினாலும் அவன் தமிழ்க்குடி மகன்தான். எப்படிக் கண்ணனை கிருஷ்ணனென்றும், பர மாத்மா என்றும், பரந்தாமன் என்றும், வேணுகோபாலன் என்றும், விஷ்ணுவென்றும் யாதவர்களும், வைணவர்களும் பல பெயரிட்டு அழைக்கிறார்களோ அதைப்போலத்தான் தமிழ்க்குடிமகனைப் பல பெயரிட்டு அழைக்கிற நிலைமை தமிழகத்திலே ஏற்பட்டது. அந்த நிலைக்குக் காரணம் தமிழ்க்குடிமகன் அகராதியி லேயே இல்லாத வார்த்தை - ஜாதி என்ற வார்த்தை புதிதாக நுழைக்கப்பட்டமைதான். அப்படி நுழைக்கப்பட்டதன் கார ணமாகத் தமிழ்க்குடிமகன் பல பிரிவுகளாக ஆக்கப்பட்டான். அப்படிப் பிரிக்கப்பட்டதற்குப் பல்வேறு காரணங்கள் சொல் லப்பட்டன. அதற்கு ஆண்டவன் சாட்சிக்கு இழுக்கப்பட் டான்! வேதங்கள், சாத்திரங்கள், சம்பிரதாயங்கள் இவைகள் தான் இந்தச் சமூக நீதிக்குக் காரணம் என்று சமூகத்தில்