________________
முனைவர் மு.தமிழ்க்குடிமகன் 14 அநீதியைப் புரிந்தவர்கள் அவைகளைத் தங்களுக்கு எடுத்துக் காட்டுக்களாகச் சொன்னார்கள். இவன் பிரம்மதேவனின் தலையிலே உதித்தான், அவன் தோளில் உதித்தான், இவன் தொடையில் பிறந்தான், இவன் காலில் உதித்தான், காலில் பிறந்த காரணத்தால் கீழ்சாதிக்கா ரன் இவன் என்று சொன்னார்கள். ஆண்டவனையே சாட் சிக்கு இழுத்துத் தமிழ்க்குடிமகனைத் தாழ்த்தி விட்டார்கள். இப்பொழுதுதான் தன்மான இயக்கம் இந்த மண்ணிலே தோன்றியது. இப்படிச் சாதியின் பெயரால், மதத்தின் பெய ரால், வேதங்களின் பெயரால், இதிகாசங்களின் பெயரால் மக்களைத் தாழ்த்தியிருக்கின்ற நிலை, பிற்படுத்தியிருக்கின்ற நிலை, சரியா? தகுமா? முறையா? என்று தன்மான இயக்கம் கேட்டது. அந்தத் தன்மான இயக்கத்தின் மொத்த வடிவமாகத்தான் தந்தை பெரியார் குரல் எழுப்பினார். அந்தக் குரலுக்குக் கிடைத்த பதில்தான் இவர்கள் ஆண்டவன் பிறப்பிலேயே தாழ்ந்தவர்கள், கீழ்சாதிக்காரர்கள் என்று சொன்னார்கள். அதற்குத் தன்மான இயக்கத்தின் சார்பில் நாம் அளித்த பதில் தான் ஆண்டவன் என்று ஒருவன் இருந்து அவன் தன் நெற்றியிலும், தோளிலும், தொடையிலும், காலிலும் மக் களை பிரசவித்திருப்பானானால் அப்படி உற்பத்தி செய்யப் பட்ட அனைவரும் அவரது உடலிலே பிறந்த மனிதர்கள் தானே -அவர்களை ஏன் இத்தனை பிரிவுகளாகப் பிரிக்கிறீர் கள்? என்று கேட்டது மாத்திரமல்ல, இன்னொன்றையும் கேட்டோம். அத்திமரத்தை எடுத்துக் கொண்டால் உச்சியிலும், கிளை யிலும், அடிமரத்திலும் காய்கள் காய்க்கின்றன. எங்கே காய்த்தாலும் அதனை அத்திக்காய் என்றுதான் சொல்கி றோமே தவிர, அடிமரத்தில் காய்ப்பதைப் பரங்கிக்காய் என்றோ, உச்சியில் காய்ப்பதை வெண்டைக்காய் என்றோ