________________
15 கலைஞர் மேல் காதல் கொண்டேன் அழைப்பதில்லை. அதைப் போலத்தான் பிரம்மாவின் நெற் றியில் பிறந்தவரும், தோளிலும், தொடையிலும், காலிலும் தோன்றியவரும் மனிதர்கள் தானே தவிர அவர்களில் உயர்வு தாழ்வு எதுவும் இல்லை என்று சொன்னோம். அதற்கு இதுவரை பதில் இல்லை. ஆனால் சாதிகள் நூற்றுக்கணக் கில், ஆயிரக்கணக்கில் பெருகின. சாதி பெருகிடப் பெருகிட, அதனை மூலதனமாக வைத்து ஆதிக்கவர்க்கம் தன்னை வலுப்படுத்திக் கொள்ளும் வாய்ப்பை உருவாக்கிக் கொண்டது! சாதிகள் ஒழிக்கப்பட வேண்டும் என்ற முழக்கம் தமிழகத்தில், தன்மான இயக்கத் தின் சார்பில் எழுப்பப்பட்ட அதே நேரத்தில் இந்திய உபகண்டத்தில் உத்தமர் காந்தியடிகளின் உதடுகளிலே இருந்து அவரின் உள்ளத்து முழக்கம் வெளிப்பட்டது. பல் வேறு அரசியல் இயக்கங்கள் சாதிகள் ஒழியவேண்டும் என்பதிலே முனைப்பைக் காட்டின. அதிலே தலைசிறந்த தாக எல்லோருக்கும் வழிகாட்டத் தக்கதாக இருந்த இயக்கம் திராவிடர் இயக்கம். சாதி ஒழிப்பு இயக்கங்களுக்கு எல்லாம் தலைமை தாங்கியது தன்மான இயக்கம்தான். தந்தை பெரியாரும், பேரறிஞர் அண்ணாவும்தான் என்பதை வரலாறு படித்தவர்கள் மறந்துவிட மாட்டார்கள். சாதியை ஒழிப்பதற்கு "சாதி ஒழிக ஒழிக" என்று சொல்லிக் கொண்டிருந்தால் போதுமா என்றால் போதாது. எல்லாச் சாதியைச் சேர்ந்த மக்களும் தங்களை ஒருவரோடு ஒருவர் உடன்பிறப்புகளாகக் கொண்டு பழகிட வேண்டும். தீண்டாமையை ஒழித்திட வேண்டும். பெரிய சாதிக்காரர்கள் வாழ்கின்ற பகுதிகளில் தாழ்த்தப் பட்ட சாதிக்காரர்கள் என்று அழைக்கப்படுகிறவர்கள் தோளிலே துண்டுகூடப் போட்டுக் கொள்ளாத நிலை மாற் றப்பட வேண்டும்; காலிலே செருப்புப் போடுவதற்கும் தடை என்றிருந்த நிலை மாறவேண்டும்; என்றெல்லாம்