உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கலைஞர் மேல் காதல் கொண்டேன் 1992.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

முனைவர் மு.தமிழ்க்குடிமகன் 16 போராடிப் போராடிப் பெற்ற வெற்றியின் அடையாளமாகத் தான் இன்றைக்கு இந்தக் கல்லூரி முதல்வர் பேசும்போது குறிப்பிட்டாரே யாதவர் கல்லூரி என்ற பெயரில் இது அமைந்திருந்தாலும் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த பெரும்பாலான மாணவர்கள் இந்தக் கல்லூரியில் படிக்கிறார்கள் என்று சொன்னாரே அந்தப் பாகுபாடு இருக் கின்ற நிலையாகும். சாதிகள் ஒழிக்கப்பட நம்மிடத்திலே நல்ல உணர்வுகள் வெளிப்பட வேண்டும். ஒரு சாதி இன்னொரு சாதியோடு உறவு கொண்டிட வேண்டும் என்கிற நல்ல வழியை அறிஞர் கள் அனைவரும் ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள். நடைமு றைப் படுத்தினார்கள். இப்படிச் சாதிகள் ஒன்றோடொன்று இணைந்து 'ஒன்றே குலம்' என்ற நிலை ஏற்பட்டாக வேண் டும். அதுவே நம்முடைய குறிக்கோள். ஒன்றே குலம் வேண்டும், அதுவே எங்கள் குறிக்கோள் என்று கூறுகிறாயே, அப்படிக் கூறும் நீ வகுப்புரிமை வேண்டும் என்று கேட்பதிலிருந்து வகுப்புகள் இருந்திட வேண்டுமென்று கூறுகிறாயா என்று நீங்கள் கேட்டிடக்கூ டும். இங்கேதான் ஆழமாகச் சிந்திக்க வேண்டும். ஒன்றே குலம் என்பதே நம்முடைய குறிக்கோள். அந்தக் குறிக்கோளை அடைகிறவரை இருக்கிற வகுப்புகளுக்குரிய உரிமைகள் குறைக்கப்படக் கூடாது இதுதான் நம்முடைய குறிக்கோள். தந்தை பெரியார் அவர்கள் கோயில்களே கூடாது என்ற குறிக்கோள் கொண்டவர். அந்தக் குறிக்கோளுடைய தந்தை பெரியார் கோயிலிலே அர்ச்சனை செய்கிறவர்கள் எல்லாச் சாதிகளையும் சேர்ந்தவர்களாக இருக்கவேண்டும். அய்யராக வும் இருக்கலாம், அரிசன சமூகத்தைச் சேர்ந்தவராகவும் இருக்கலாம். அதற்கோர் சட்டம் தேவை என்று நாம் ஆட்சியி