________________
17 கலைஞர் மேல் காதல் கொண்டேன் லிருந்தபோது குரல் கொடுத்தார். அந்தக் குரலை நாங்கள் சட்டமாக ஆக்கினோம். ஆனால் உச்ச நீதிமன்றத்தில் சில சனாதனிகள் தொடுத்த போரின் காரணமாகத்தான் நாங்கள் உருவாக்கிய சட்டம் முடமாக்கப்பட்டு இன்னும் எழுந்து நடமாட முடியாமல் இருக்கின்றது. அரசியல் சட்டத்திற்கு எத்தனையோ திருத்தங்கள். ஆனால் இந்தச் சட்டம் நிறை வேற திருத்தம் கொண்டு வரப்படவில்லை. திருத்தம் கொண்டு வரப்பட வேண்டும் என்று குரல் கொடுத்த தந்தை பெரியார் மறைந்து விட்டார். அவர் மறைந்த நேரத்தில் சொன்னேன் அனைத்து சாதி மக்களும் ஆலயங்களிலே அர்ச்சகர்களாக ஆக வேண்டும் என்று போர்க் கொடி உயர்த்தினார் பெரியார். அதற்கென இயற்றப்பட்ட சட்டம் உச்ச நீதிமன்றத்தில் முடமாக்கப் பட்டு விட்டது. ஆகவே தந்தை பெரியார் இதயத்தில் குத்தப்பட்டிருக்கிற முள்ளை எடுக்காமலேயே அவரைப் புதைக்கிறோம் என்று வேதனையோடு நான் குறிப்பிட்டேன். அந்த முள் வேறு எதுவும் அல்ல. 'ஆண்டவனைப் பூஜிக்கிற அத்தனை பேரும் அர்ச்சனை செய்யும் உரிமை படைத்தவர்க ளாக இருக்கவேண்டும். யார் யார் அர்ச்சனை செய்யும் தகுதி யைப் பெற்று விடுகிறார்களோ, பயிற்சியின் மூலம் தேர்ச்சி யைப் பெறுகிறார்களோ அவர்கள் அரிசன சமுதாயத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் - கள்ளராக, மறவராக, யாதவ ராக இருந்தாலும், அவர்கள் அர்ச்சகர்களாக ஆகலாம் என்று பெரியார் கூறினார் என்றால், அதற்கு என்ன பொருள்? கோயில் வேண்டும் என்று அர்த்தம் அல்ல. 'கோயில் கூடாது என்பது குறிக்கோளாக இருந்தாலும், கோயில் என்பது இருக்கும் வரை அங்கே அர்ச்சனை செய்கிற உரிமை அனைவருக்கும் இருக்கவேண்டும்' என்பதுதான் அவருடைய உரிமை முழக்கம். இப்படிக் கொள்கைக்கும் உரிமைக்கும் வித்தியாசம் தெரியாத சில பேர் தங்களையும்