உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கலைஞர் மேல் காதல் கொண்டேன் 1992.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

முனைவர் மு.தமிழ்க்குடிமகன் 18 குழப்பிக் கொண்டு, மக்களையும் குழப்பிக் கொண்டிருக்கி றார்கள். கொள்கை என்பது வேறு. அந்தக் கொள்கையை நிறைவேற்ற நடத்துகின்ற பயணத்திலே நமக்கென்று உரிமை கள் இருக்கவேண்டும். ஒன்றே குலம் என்பது நம்முடைய குறிக்கோள். நாம் உயிரோடு இருக்கிறோமோ இல்லையோ இன்னும் இரண்டு மூன்று தலைமுறைகளுக்குப் பிறகு, ஐம்பது நூறாண்டுகளுக்குப் பிறகு யாதவர், முதலியார், பிள்ளை என்று சாதிப் பெயர்களே இல்லாத நிலை ஏற்படக்கூடும். அப்படி ஏற்படுகிற வரையில் இருக்கின்ற உரிமைகளை நாம் இழந்துவிடக் கூடாது. அதற்காகத்தான் இன்றைக்குப் பிற்படுத்தப்பட்ட சமுதா யத்தைச் சேர்ந்த தலைவர்கள் எல்லாம், இந்தச் சமுதாயத்தின் உரிமைகள் பறிக்கப்படுகின்ற போது பதறுகிறார்கள். பதைக் கிறார்கள். பரபரப்பு அடைகிறார்கள். துடிக்கிறார்கள். துவண்டு போகிறார்கள். இந்த நிலை மாற வேண்டுமா? வேண்டாமா என்பதை எதிர்காலத்தை உருவாக்க இருக்கின்ற மாணவக் கண்மணிகள் எண்ணிப் பார்த்திட வேண்டும். இந்தக் கல்லூரியில் 87 விழுக்காட்டுக்கு மேலான பிற்படுத்தப்பட்டோர் படிக்கிறார்கள் என்றால் 1928-ஆம் ஆண்டு நீதிக்கட்சி ஆதரவோடு அமைச்சர் பொறுப்பை வகித்து வந்த முத்தையா அவர்கள் வகுப்புவாரி பிரதிநிதித்து வம் என்ற சட்டத்தை அறிமுகப்படுத்தியதன் காரணமாகத் தான் பிராமணர்கள் பிராமணர் அல்லாதவர்கள் மக்கள் தொகை விழுக்காட்டிற்கு ஏற்றவாறு கல்லூரிகளிலும் வேலை வாய்ப்புக்களிலும் இடம் பெறவும் வழி வகுத்தது. நான் இதைச் சொல்வதால் இங்கே நான் ஜாதிப் பிரச்சி னையைப் பேசுவதாகக் கருதக்கூடாது.