________________
19 கலைஞர் மேல் காதல் கொண்டேன் பிராமணர் சமுதாயம், பிராமணர் அல்லாதார் சமுதாயம் என்பது வரலாற்றில் யாரும் மறைக்க முடியாத பகுதியாகும். பிராமண வரலாற்று ஆசிரியர்களே அதனை ஒப்புக் கொண்டி ருக்கிறார்கள். அவர்கள் படித்து முன்னேறிய சமுதாயத்தைச் சேர்ந்தவர் கள். ஆனால் பிராமணர் அல்லாதவர்கள் படிப்பறிவு இல்லா தவர்கள். படிப்பதே பாவம் என்று கருதிக் கொண்டு படிப்ப றையின் தலைவாசலையே எண்ணிப் பார்க்காதவர்களாக இருக்கிறார்கள். மக்கள் தொகையில் மிகக் குறைவானோர் கல்வியறிவு படைத்தவர்களாகவும், அதிக எண்ணிக்கை படைத்தவர்கள் கல்வியறிவு அற்றவர்களாகவும் தாழ்ந்த சூழ்நிலையில் இருக்கிறார்கள். அப்படிப்பட்டவர்கள் உரிமை பெறத்தான் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் கொண்டு வரப்பட்டது. 1951-ஆம் ஆண்டு உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக் கப்பட்டு அந்தச் சட்டம் முறியடிக்கப்பட்டது. அன்று இருந்த காங்கிரஸ் அமைச்சர் கம்யூனல் ஜி.ஓ. எந்த அளவுக்கு மக்களுக்குத் தேவையானது என்பதை மற்றவர்களுக்கு அறி வுறுத்த அதை உயர் நீதிமன்றத்திற்கு மேல் முறையீடு செய்தார்கள். உச்ச நீதிமன்றத்திலும் கம்யூனல் ஜி.ஓ.வின் கழுத்து நெறிக்கப்பட்டது. அதற்குப் பிறகு, பண்டித நேரு அவர்களி டத்தில் தமிழ்நாட்டில் பேரறிஞர் அண்ணா பெரியார் உயர்த்திய போர்க் கொடியைச் சுட்டிக்காட்டிப் பெருந்தலை வர் காமராசர் அவர்களும் அன்றைக்கு இருந்த காங்கிரஸ் தலைவர்களும் நேருவிடம் சொன்னார்கள். அவர்களே அதைப்பற்றித் தெளிவாக உணர்ந்து அரசியல் சட்டத்தில் ஒரு திருத்தத்தைக் கொண்டுவந்து அந்தத் திருத்தத்தை நேரு அவர்களே ஆதரித்துப் பேசி அந்தத் திருத்தத்தின் அடிப்படை