________________
முனைவர் மு.தமிழ்க்குடிமகன் 20 20 யில் 51-ம் ஆண்டு பிற்படுத்தப்பட்ட மக்களுக்குக் கல்லூரிக ளில் சேருவதற்கான இட ஒதுக்கீடு 25 சதவிகிதம் என்றும், தாழ்த்தப்பட்ட மக்களுக்கு 15 சதவிகிதம் என்றும் மீதம் உள்ள 60 இடங்கள் எல்லா ஜாதிக்காரர்களும் போட்டியிடக் கூடிய இடங்கள் என்றும் முறைப்படுத்தப்பட்டது. அது ஒரு ஏற்பாடு என்றாலும் அதுகூட பிற்படுத்தப்பட்ட மக்களுக்குப் போதுமானதாக இல்லை. இருந்தாலும் இதாவது கிடைத் ததே என்று மன ஆறுதலோடு ஏற்றுக் கொண்டார்கள். அதற்குப் பிறகு 71-ம் ஆண்டு முதல்வர் பொறுப்பை நான் ஏற்றுக் கொண்டபோது சட்டப் பேரவையிலேயே சொன்னேன். பிற்படுத்தப்பட்ட தாழ்த்தப்பட்ட சமுதாயத்து மக்களுக்காக என்னுடைய ஆட்சிக் காலத்தில் என்னுடைய வாழ்வையே பணயமாக வைத்து வாதாடுவேன் - போராடு வேன் என்று சொன்னேன். நானே பிற்படுத்தப்பட்ட சமுதா யத்தை சேர்ந்தவன். எனவே அவர்களின் நலனைக் கவனிக்க என்னுடைய ஆட்சிக்காலத்தில் தொடர்ந்து பாடுபடுவேன் என்று உறுதி அளித்தேன். பிறகு அதற்கெனச் சட்டநாதன் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டது. அந்தக் குழு சில பரிந்துரைகளைத் தந்தது. அந்தப் பரிந்துரைகளிலே ஒன்றுதான் 25 சதவிகிதம் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு என்று இருந்ததை மேலும் உயர்த்த வேண்டும் என்கிற பரிந்துரையாகும். 8 சதவிகிதம் உயர்த்த வேண்டும் என்றார்கள். 8 சதவிகிதத்தில் அதைப் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர்களுக்கே உயர்த்தி விட்டால் அது நன்றாக இராது என்று 8-ல் 6 சதவிகிதத்தை எடுத்துப் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு உயர்த்தி அதை 31 சதவிகிதம் என்றாக்கி, இரண்டு சதவிகி தத்தை தாழ்த்தப்பட்டவர்களுக்கு உயர்த்தி அதை 18 சதவிகி தம் என்றாக்கி அதற்கு மேல் உயர்த்துவதற்கு இடம் இருக்கி றதா? என்று கேட்டு அரசியல் சட்டப்படி உயர்த்த இயலாது