உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கலைஞர் மேல் காதல் கொண்டேன் 1992.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

21 கலைஞர் மேல் காதல் கொண்டேன் என்ற நிலைமை தெரிவிக்கப் பட்டதால் அது கைவிடப் பட்டது. பிற்படுத்தப்பட்ட தாழ்த்தப்பட்டோருக்கு ஒதுக்கப் பட்டது போக மீதி உள்ள 51 சதவிகிதத்திலும் ஒரு தனிப்பி ரிவு ஏற்படுத்தலாம் என்று கண்டு அதற்கு அரசியல் சட்டத் தில் எந்தவித இடையூறும் இல்லை என்பதைப் புரிந்து கர்நாடக முதல்வர் தேவராஜ் அர்சு அவருக்குத் தரப்பட்ட சட்ட ஆலோசகர்கள் கருத்துப்படி அவர் 51 சதவிகிதத்தில் எல்லா ஜாதியிலும் உள்ள ஏழைகளுக்கு 15 சதவிகிதம் என்று ஒதுக்கி இருக்கிறார். நான் இங்கே பொறுப்பில் இருந்திருந் தால் தேவராஜ் அர்சைப் பின்பற்றி 51 சதவிகிதத்தில் 15 சதவிகிதத்தைப் எல்லா ஜாதியிலும் உள்ள ஏழைகளுக்கு ஒதுக்கி இருப்பேன். ஐயோ! நான் முதல்வராக இல்லையே என்ற கவலை யால் நான் இதைச் சொல்லவில்லை. இந்தக் காரியத்தை உங்களுக்கு செய்யக்கூடிய இடத்தில் நான் இல்லையே என்ற வருத்தத்தில் சொல்லுகிறேன். 15 சதவிகிதத்தை ஒதுக்கினார் யாருக்கு? பிராமண சாதியிலே உள்ள ஏழையானாலும், முதலியார், செட்டியார், மற்றும் உள்ள உயர்சாதிக்காரர் ஆனாலும் பிற்படுத்தப்பட் டோர், தாழ்த்தப்பட்டோர் ஆகிய வகுப்புகளில் உள்ள எல்லா ஏழைகளுக்கும் கர்நாடகத்தில் ஒதுக்கப்பட்டுள்ளது. அந்த நிலை தான் இங்கேயும் பின்பற்றப்பட வேண் டுமே அல்லாமல் 'உழக்குக்குள்ளே கிழக்கு மேற்கு'ப் பார்ப் பதைப் போல் பிற்படுத்தப்பட்ட ஜாதிக்குள்ளேயே ஏழை, பணக்காரன் என்று பார்த்துக் கொண்டிருப்பது நியாய மில்லை. தர்மம் அல்ல. எதிர்காலத்தில் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு பெரிய இருள் கவிழ்ந்த நிலை ஏற்பட்டுவிடும் என்று நாம் எச்சரிக்கிறோம். எதிர்க்கட்சியின் சார்பிலே